அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அமைச்சரவையில் பங்கேற்கும் விசிக, முஸ்லிம் லீக்? அழைப்பு விடுத்தார் ஆதவ் அர்ஜூனா… நாளை தெரியும் முடிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் பங்கேற்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அழைப்பு விடுத்துள்ள நிலையில், வி.சி.க.,வும், ஐ.யூ.எம்.எல் கட்சியினர் நாளை தங்களது முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவைக் கேட்டது. முதன் முதலில் 5 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், தலா இரண்டு எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இந்தி யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டிய நிலையில் விஜய்க்கு 13 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்தது. ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் விஜய் 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற்று விஜய் முதல்வரானார்.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசில் அவருடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்கள் பதவியேற்றனர்.

என். ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை, ஆதவ் அர்ஜூனாவுக்கு பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, அருண் ராஜுக்கு சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டன. மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு நிதித் துறை, ராஜ் மோகனுக்கு பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி, கீர்த்தனாவுக்கு தொழில்துறை, பிரபுவுக்கு இயற்கை வளங்கள் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் வெங்கட் ரமணனுக்கு உணவு, பொது விநியோகம், சி.டி.நிர்மல் குமாருக்கு மின்சாரம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுத்த தவெக…

இந்நிலையில், ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் தவெக இடமளிக்கும் என ஒரு புறமும், அ.தி.மு.கவில் இருந்து தவெகவிற்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அ.தி.மு.கவினருக்கு அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என அரசியல் களத்தில் தகவல்கள் பரவியது.

இதனால், அ.தி.மு.கவினருக்கு அமைச்சரவையில் இடமளித்தால், தவெகவிற்கு ஆதரவளித்த தங்கள் முடிவு குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்வதாக கடந்த ஒரு வாரமாக வி.சி.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறி வந்தனர்.

இப்படியான நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘‘அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார். சமூக நீதி அடிப்படையில் இயங்கக்கூடிய தலைவர்களும் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய வேண்டும். காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். வெளியில் இருந்து ஆதரவு என்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை மதிக்கிறோம். அமைச்சரவையில் பங்கு பெற விசிகவை அழைக்கிறோம். முதலமைச்சரின் விருப்பமும் அது தான். முஸ்லிம் லீக் கட்சியினரும் இடம்பெற வேண்டும் என அழைக்கிறோம். இடதுசாரி கட்சிகளும் வர வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம். குடும்பமாக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.” என்று கூறியுள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் இணைவார்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், “அ.தி.மு.க நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், திமுக – அதிமுக உடன் இணைந்து சூழ்ச்சி செய்தது. திமுகவை எதிர்க்க தான் அதிமுக தொடங்கப்பட்டது. அதிகாரத்துக்காகவும், அமைச்சரவைக்காகவும் ஆதரவு தரவில்லை என சி.வி.சண்முகம் கூறியிருக்கிறார். தோழமையுடன் தான் ஆதரவு தெரிவித்ததாக கூறினார்கள். யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அவர்களின் உரிமை. அவர்களின் அடுத்த செயல்திட்டத்தை அவர்களே அறிவிப்பார்கள். சட்ட சிக்கல் வந்தால் அவர்கள் சந்திப்பார்கள்.” என்று கூறினார்.

இந்நிலையில், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக நாளை முடிவை அறிவிக்க உள்ளதாக, வி.சி.க., காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவெகவின் அழைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், அமைச்சரவையில் இணைவது தொடர்பாக ஆலோசனை செய்து நாளை காலை முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், அமைச்சரவை தொடர்பான கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் நாளை தங்கள் முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் இணைவது குறித்து திருமாவளவன் பேசியது என்ன?

ஆதவ் அர்ஜூனா அமைச்சரவையில் இடம் பெற ஆதரவளித்த கட்சியினருக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், இது குறித்து திருமாளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க., தலைவர் தொல்.திருமாவளவன், ‘‘ஆதவ் அர்ஜுனாவின் அழைப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். கடந்த 8ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்திலேயே அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து தோழர்கள் பேசினார்கள். அப்போதைக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகக் கூறினோம். தற்போது அழைப்பு வந்துள்ள நிலையில் அதனை ஏன் ஏற்கவில்லை என்கிற கேள்வி எழக்கூடும். கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களோடு கலந்து பேசி எங்களது முடிவை அறிவிப்போம்.

அ.தி.மு.க.,வின் ஒரு பிரிவுக்கு அமைச்சரவையில் ஆதரவு தரப்படுமானால், எங்கள் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என்று 2, 3 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தேன். தற்போது அத்தகைய முயற்சிகள் இல்லை என்கிற தகவல் கிடைத்திருக்கிறது. அமைச்சரவையில் அ.தி.மு.க., இடம்பெற வாய்ப்பில்லை என த.வெ.க., தரப்பிலிருந்து தனக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது,’’ எனப்பேசியுள்ளார்.

இந்த நிலையில், இன்று மதியம் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த மா.கம்யூனிஸ்ட், பொதுச் செயலாளர் சண்முகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வீரபாண்டியன், அ.தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்வோம் எனத்தெரிவித்துள்ளனர்.

ஆதவ் அர்ஜூனாவின் அமைச்சரவை அழைப்பு குறித்து பேசிய வீரபாண்டியன், ‘‘மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு, இன்னொரு தேர்தல் திணிக்கப்படக்கூடாது, குறிப்பாக ஆளுநர் அதிகாரத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் ஆதரவு தெரிவித்தோம். இடதுசாரிகள் மற்றும் விசிக வெளியிலிருந்து ஆதரவு என்கிற ஒரே முடிவை எடுத்திருந்தோம். எங்கள் ஆதரவே அவர்களுக்குப் போதும். வேறு சிந்தனைகள் தேவையில்லை. இது குறித்து முதலமைச்சர் தான் சிந்திக்க வேண்டும்.” என்றார்.

விசிகவுக்கு அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பாக பதிலளித்த சண்முகம், ‘‘நாங்கள் கூட்டாக சேர்ந்து தான் முடிவெடுத்திருக்கிறோம். ஒருவேளை அமைச்சரவையில் பங்கேற்பது என்கிற யோசனை வி.சி.க.,வுக்கு இருந்தால் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கண்டிப்பாக எங்களிடம் கலந்தாலோசிப்பார்கள், எங்களின் முடிவையே அவர்களும் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அவர்கள் நினைத்தால் அதில் தவறில்லை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றார்.

செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் என, தவெகவிற்கு வெளியிலிருந்து ஆதரவளித்த கட்சியினர் தலைவர்கள் அனைவரும், அ.தி.மு.கவினருக்கு அமைச்சரவையில் தவெக இடம் தரும் நிலையில், தவெகவிற்கான தங்களது ஆதரை திரும்பப்பெறும் மனநிலையில் உள்ளனர்.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of திலீபன்

திலீபன்