அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சௌதி உச்ச நீதிமன்றம்

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன்

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனின் மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நேற்றைய தினம் (அக்.13) ரத்து செய்யப்பட்டதாக இலங்கை வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான முன்னெடுத்த இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகள் காரணமாகவே இந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்வதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சௌதி அரசாங்கத்திற்கும், இலங்கை தூதரகத்திற்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவருக்கும் இலங்கை மற்றும் சௌதி அரேபிய சட்ட வல்லுநர் குழுவிற்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் சௌதியில் கைது செய்யப்பட்ட சிவராசா அனோஜனுக்கு முதலில் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பின்னர் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்த மரண தண்டனையை சவாலுக்கு உட்படுத்தி, இலங்கை அரசாங்கம் சார்பில் சௌதி அரேபியா சென்றிருந்த மூன்று சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு, இந்த நாட்டு சட்ட வல்லுநர்களுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான விசாரணைகளின் போதே, உச்ச நீதிமன்றம் அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh