அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழகத்தில் உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர்!

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்துக்கொண்டார். அப்போது ரூபாய் 139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 மருத்துவக் கட்டங்களைத் திறந்து வைத்ததோடு, மருத்துவ துறையில் உள்ள நவீன உபகரணங்களின் பயன்பாட்டைத் தொடக்கி வைத்தார். அதற்கு முன்னதாக தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மேலும் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயர்தர சிறப்பு சிகிச்சைகள் கிடைக்கப் பெறுவதற்காகவும், உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில் நலம் TN (www.tnhealthfoundation.org) என்ற இணையதள பக்கத்தைத் தொடங்கி வைத்தார். இதில் திருமணம், பிறந்த நாள் விழா போன்ற வீட்டில் நடைபெறக்கூடிய சிறிய நிகழ்ச்சிகளைக் கொண்டாட விரும்பாதவர்கள், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நன்கொடை செய்ய நினைக்கும் பெரு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மருத்துவ கல்லூரி மாணவர்கள் போன்றவர்கள் மேற்கூறியுள்ள இணையதளத்தின் வாயிலாக நன்கொடை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியை வைத்து தமிழகத்தில் மருத்துவ வசதி மேம்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பெரம்பூரில் விஜய்:

தமிழகத்தில் நடைபெறக்கூடிய அரசு விழாவில் கலந்துக் கொள்ளும் முன்னதாக, தமிழக முதல்வரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வுமான விஜய், தன்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்து ஆய்வு செய்தார். பின்னர் முதற்கட்டமாக இத்தொகுதியில் நகர்புற உள்கட்டமைப்பு, வீட்டு வசதி மேம்பாடு, குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாடு, பொது பயன்பாட்டு வசதிகள், திறன் மேம்பாடு மற்றும் உயர் கல்வி நலத்திட்டங்கள், பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் என மொத்தம் ரூ.1,013 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டவுடன், அனைத்துப் பணிகளும் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் எனவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V