அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பெண்கள் வீடுகளில் சிலிண்டர் தூக்குவதில்லையா?’ – பெண்ணுக்கு வேலை மறுத்த ஐஓசிக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா என்ற பெண்மணி கடந்த 1988 ஆம் ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி உருளைகள் நிரப்பும் ஆலையில் ரீஃபில்லிங் ஹெல்ப்பர் பணிக்காக விண்ணப்பித்துள்ளார். இந்த வேலைக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 49 பேரில் 43 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், சுமித்ராவுக்கு மட்டும் வேலை மறுக்கப்பட்டது. பெண் என்பதால், அதிக எடைக்கொண்ட சிலிண்டர்களைத் தூக்க முடியாது என்ற காரணம் காட்டி வேலை மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இந்த பெண் நீதிமன்றத்தை நாடினார். பல ஆண்டுகளாக சட்டப்போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்திற்கு விசாரணை வந்தது.

ஐஓசியின் வாதமும்; நீதிமன்றத்தின் கண்டனமும்:

இந்த வழக்கு விசாரணையானது நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, சுமித்ரா என்ற பெண்மணி விண்ணப்பித்த பணியில் கனமான எல்பிஜி சிலண்டர்களைத் தூக்க வேண்டும் என்றும், இரவு நேர ஷிப்டுகளில் ஆண்களுடன் இணைந்துப் பணியாற்ற வேண்டும். இதனால் தான் இந்த பெண்மணிக்கு பணி வழங்க மறுக்கப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் ஐஓசி நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் ஐஓசி நிறுவனத்தைக் கடுமையாக சாடினர். பெண்களால் எல்பிஐ சிலிண்டர்களைத் தூக்க முடியாது என்ற தவறான அனுமானம் குறித்து காட்டமாகக் கேள்வி எழுப்பினார்கள். மேலும் பெண்கள் என்ன வீடுகளில் கேஸ் சிலிண்டர்களைத் தூக்கி மாற்றுவதில்லையா? என்று கேள்வி எழுப்பியது. இந்தியாவில் பெண்களைத் தெய்வம் எனப் போற்றிவிட்டு, அரசு நிறுவனமே பெண் என்பதால் வேலை மறுப்பது பெண்களின் கண்ணியத்திற்கு இழைக்கப்படும் அவமானம் என குறிப்பிட்டது. தற்போது சுமித்ரா, பணி ஓய்வு பெறும் வயதைக் கடத்துவிட்டது என்பதால், பணியில் அமர்த்த முடியாது. எனவே அவருக்குப் பண ரீதியிலான இழப்பீடு வழங்குவதே சரியானத் தீர்வாக இருக்கும் என்பதால் ஒரே தவணையாக ரூ.12 இலட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு ஐஓசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
,

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V