அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

ஆதவ் அர்ஜூனாவிற்கு சோசியல் மீடியாவின் வாயிலாக பதிலடி கொடுத்த ரஜினி; கருத்துக்களைப் பகிரும் நெட்டிசன்கள்!

தமிழக அரசியியல் ஒவ்வொரு நாளும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி மாற்று கட்சியினர் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக்கத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார். அதாவது நடிகர் ரஜினி காந்த அரசியலுக்கு வராதமைக்குக் காரணம் திமுகவின் மிரட்டல் என்று பேசியிருந்தது அனைவரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்துக் குறித்து ரஜினி ரசிகர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என அனைவரும் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிர்ப்பு வந்தனர். போட்டியின் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர்.

https://x.com/rajinikanth/status/2033787480840015977?s=46&t=piFbVvlJ872ty_s9qzPtWg

இந்த சூழலிலும் இதுவரை மௌனம் காத்து வந்த நடிகர் ரஜினிகாந்த், தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு தன்னுடைய கண்டனத்தை எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அதில் தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ் மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். “காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மதுரையில் ரஜினி ரசிகர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அரசியலுக்கு ரஜினி வருவார் என்பது போன்று பேசியிருந்தனர். இந்நிலையில் காலம் பேசாது காத்திருந்து பேசாது சொல்லும் என்று தெரிவித்துள்ள கருத்து பேச்சுப்பொருளாக தற்போது மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk