அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கையின் மிக உயரமான யானை என அடையாளம் காணப்பட்ட காவன்திஸ்ஸ திடீர் இறப்பு

இலங்கையிலுள்ள மிகவும் உயரமானதும், கம்பீரமானதுமானது என அடையாளம் காணப்பட்ட, காவன்திஸ்ஸ என செல்லமாக அனைவராலும் அழைக்கப்பட்ட யானை சுகயீனம் காரணமாக இன்று இறந்துள்ளது.

கடந்த சில வார காலமாகவே இந்த யானை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்திருந்தது.

கல்நேவ – சியம்பலன்கமுவ பகுதியை அண்மித்துள்ள வனப் பகுதியில் வாழ்ந்து வந்த இந்த யானையின் வலது காலில் துப்பாக்கி சூட்டு காயமொன்று ஏற்பட்டிருந்தமையை அண்மையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குறித்த யானையை வனவிலங்கு அதிகாரிகள் தமது பொறுப்பிற்கு எடுத்து, அதே பகுதியில் வைத்து சிகிச்சை வழங்கியிருந்தனர்.

தேசிய மிருககாட்சிசாலை திணைக்களம், பேராதனை பல்கலைக்கழக மிருக மருத்துவ பீடம், முப்படையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து, யானைக்கான சிகிச்சைகளை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில், குறித்த யானைக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை அடுத்து, குறித்த யானை ஓரளவு குணமடைந்திருந்தது.

இதையடுத்து, காவன்திஸ்ஸ யானையை வனப் பகுதிக்கு அதிகாரிகள் விடுவித்திருந்தனர்.

இவ்வாறு வனப் பகுதிக்கு யானை விடுவிக்கப்பட்ட போதிலும், யானை தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியான அவதானித்து வந்திருந்தனர்.

எனினும், இந்த துப்பாக்கி சூட்டு காயங்களை அடுத்து, குணமடைந்தது என நம்பப்பட்ட போதிலும், இந்த யானை சரியாக உணவு உட்கொள்ளாது தொடர்ச்சியாக உடல்நிலை மோசமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், யானைக்கு வேறு சில நோய்களும் இருந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், குறித்த யானை கல்நேவ பகுதியிலுள்ள வயலொன்றில் வீழ்ந்திருந்த நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

யானைக்கான சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் மிருக மருத்துவ குழாம் மற்றும் முப்படையினர் என பல்வேறு தரப்பினரும் அந்த பகுதிக்கு விரைந்திருந்தனர்.

உடனடியாக சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், யானையை காப்பாற்ற முடியவில்லை.

காவன்திஸ்ஸ யானையானது 10.5 அடி உயரமானது என கூறப்படுகின்றது.

இலங்கையின் செல்வந்தர் என அடையாளம் டட்லி சிறிசேன, யானையை குணப்படுத்துவதற்கான அனைத்து செலவீனங்களையும் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார்.

யானைக்கு சிகிச்சை அளிக்கும் போது
Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh