அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கையின் நிழலுலக செயற்பாடு – விஷ்ணு தேவாலயத்தின் உற்சவத்திற்கும் கடும் அச்சுறுத்தல்

இலங்கை பௌத்த மக்களின் மிக முக்கிய வழிபாட்டு தளமாக விளக்கும் தேவேந்திரமுனை ஸ்ரீவிஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த உற்சவம், திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நிழலுலக தலைவர்களின் தலையீடு காரணமாக பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தேவேந்திரமுனை – உத்பலவன்ன ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் 769வது வருடாந்த உற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த உற்சவத்தின் மிக முக்கிய அங்கமாக வீதிவுலா விளங்குவதுடன், அதிலும் காவடி நடனம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இவ்வாறு நடைபெறும் காவடி நடனத்தில் கடந்த ஆண்டு நீக்கப்பட்ட காவடி குழுக்களுக்கு கட்டாயம் இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பிரபல நிழலுலக தலைவரான கஞ்ஜிபானி இம்ரான் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் தொலைபேசி ஊடாக விஷ்ணு தேவாலயத்தின் பிரதானிக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

”தேவேந்திரமுனை தேவாலயத்தின் நிலமே திலினவிற்கு சொல்கின்றேன். நேற்றைய தினம் இரண்டு முறை அழைப்பை எடுத்தேன். அழைப்பை எடுக்கவில்லை. ஒவ்வொருவர் சொல்வதை கேட்டு, சிலருக்கு நடனமாட சந்தர்ப்பத்தை வழங்கி, ஏனையோருக்கு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்தும் இறுதி உற்சவமாக இது இருக்கும். புரிகின்றதா? இதனை பதிவு செய்து போலீஸாருக்கு கொடு. குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கொடு.” என கஞ்சிபானி இம்ரான் என அடையாளப்படுத்தி நபர், தேவாலயத்தின் பிரதானிக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இவ்வாறு கஞ்சிபானி இம்ரான் என அடையாளப்படுத்திக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக, மற்றுமொரு நிழலுலக தலைவர்களில் ஒருவராக விளங்கும் தெஹிபாலே மல்லி என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து, தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீடொன்றை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகமொன்றை நடாத்தியிருந்தனர்.

இவ்வாறு நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து, தெஹிபாலே மல்லி என அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவரின் குரல் பதிவொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

”எமது ஊரையும், எமது தேவாலயத்தையும் காட்டிக் கொடுத்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே இதனை செய்தோம். அடுத்ததை விரைவில் பார்ப்போம்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தேவேந்திரமுனை விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இடம்பெறும் காவடி நடனத்தை முழுமையாக அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்னவிற்கு, போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காவடி நடனம் தொடர்பில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் மோதல் நிலைமை தொடர்பில் கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள திட்டமிட்ட குற்றச் செயல்களின் ஈடுபடும் தேவேந்திரமுனை தெஹிபாலே மல்லி மற்றும் உணாகூருவே ஷாந்த என்ற நபருக்கு ஆதரவு வழங்கும் கஞ்சிபானி இம்ரான் ஆகியோருக்கு இடையில் காவடி நடனம் தொடர்பில் மோதல் நிலைமையொன்று உருவாகியுள்ளமை குறித்து தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் மாஅதிபர், மாத்தளை மாவட்ட செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த காவடி நடனத்தில் குறித்த திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் பங்குப்பற்றுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அதனால், அமைதியற்ற நிலைமையொன்று உருவாகி, உயிர் சேதங்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவுமு; போலீஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், காவடி நடனம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி, அச்சுறுத்தல்களை விடுக்கும் சாத்தியம் காணப்படுகின்றமை குறித்தும் புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக போலீஸ் மாஅதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, வீதிவுலாவில் காவடி நடனக் குழுக்களை ஈடுபடுத்துவதை தற்காலிமாக தவிர்த்துக்கொள்ளுமாறு போலீஸ் மாஅதிபர், மாவட்ட செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இடம்பெறும் காவடி நடனங்களை உடனடியாக நீக்கிக் கொள்ளுமாறு தேவாலயத்தின் பிரதானிக்கு, மாத்தறை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்படி, தேவேந்திரமுனை விஷ்ணு தேவாலயத்தின் இம்முறை உற்சவத்தில் காவடி நடனம் இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தேவேந்திரமுனை விஷ்ணு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் காவடி நடன குழுக்களை ஈடுபடுத்துவதில் தமக்கு எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை என தேவாலயத்தின் பிரதானி, அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

எனினும், பதிவு செய்யப்பட்ட 25 காவடி குழுக்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், காவடி நடன குழுக்களை வருடாந்த உற்சவத்தி;ல் ஈடுபடுத்துகின்றமை குறித்து தொடர்ந்தும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்தும் நிழலுலக குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன், பல்வேறு இடங்களில் தொடர்ந்தும் துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh