அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 16 வீரர்களை கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குசல் மென்டீஸ் தலைமையிலான குழுவொன்று இன்றைய தினம் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு அதிக காலத்திற்கு பின்னர் தசுன் சானக்க மற்றும் சஹன் ஆராச்சி ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அத்துடன், ஒரு வருடத்திற்கு அதிக காலம் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்ணான்டோவிற்கு இம்முறை சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதேவேளை, உபாதைக்குள்ளாகியுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஷங்கவும், இம்முறை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே விளையாடுவதற்கான அனுமதி உறுதிப்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும், முடிவடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் பிரகாசிக்க தவறிய ஷரித் அசலங்க, இம்முறை அணியில் இடம்பிடிக்கவில்லை.

பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியில் பங்குப் பெறும் இலங்கை கிரிக்கெட் குழாம்

01.பெத்தும் நிஷாங்க
02.அவிஷ்க பெர்ணான்டோ
03.கமில் மிஷார
04.குசல் மென்டீஸ் (அணித் தலைவர்)
05.பவன் ரத்நாயக்க
06.சஹன் ஆராச்சிகே
07.கமிந்து மென்டீஸ்
08.ஜனித் லியனகே
09.தசுன் ஷானக்க
10.துனித் வெல்லாலகே
11.மஹிஷ் தீக்ஷன
12.சவிந்து கொலம்பகே
13.துஷ்மந்த ஷமிர
14.அசித பெர்ணான்டோ
15.டில்ஷான் மதுஷங்க
16.ஏஷான் மாலிங்க

பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை கிரிக்கெட் அணி மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த போட்டிகள் ஒக்டோபர் மாதம் 09, 11 மற்றும் 13ம் தேதிகள் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளது.

ஒக்டோபர் மாதம் 18ம் தேதி ஆரம்பமாகும் இந்த போட்டி, ஒக்டோபர் மாதம் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh