அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

SIR விவகாரம்: தேர்தல் ஆணையத்தை நோக்கி ‘இந்தியா’ கூட்டணி பேரணி; டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், SIR நடவடிக்கையில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 30-ம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் ஆணைய தலைமையகம் நோக்கி இண்டியா கூட்டணியினர் பேரணி நடத்தினர். இதில் ஆம் ஆத்மி பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இந்த பேரணிக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு:

இண்டியா கூட்டணியினர் பேரணி அறிவித்துள்ள நிலையில் தேர்தல் ஆணைய தலைமயகம் மட்டுமல்லது விஜய் சவுக், ஆகாசவாணி பவன் மற்றும் டெல்லியின் மத்திய பகுதியில் போலீஸார் உடன் அதிரடி விரைவுப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் அவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே, கடந்த சில நாட்களாக பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர், இளைஞர் அமைப்புகள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தடுத்து கைது செய்து வருகிறது டெல்லி போலீஸ். இந்தச் சூழலில் இண்டியா கூட்டணியின் பேரணி இன்று கவனம் பெற்றுள்ளது.

SIR விவகாரம்?

வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்து, தகுதியற்ற மற்றும் இரட்டை பதிவுகளை நீக்குவதற்காக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கையே சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR). ஆனால், இந்த நடவடிக்கையின் போது தகுதியான வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்படக்கூடும் என்றும், வாக்காளர் சேர்க்கை மற்றும் பதிவு தொடர்பான படிவங்களில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், பெயர் நீக்கப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு முறையான அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

மறுபுறம், தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள போலி, இரட்டை மற்றும் தகுதியற்ற பதிவுகளை அகற்றி, தகுதியான வாக்காளர்களின் உரிமையைப் பாதுகாப்பதே SIR நடவடிக்கையின் நோக்கம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V