அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

வங்கிகளுக்கு சனிக்கிழமை விடுமுறையா? வதந்தி என மத்திய அரசு அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையாக அறிவிக்கக்கோரி கடந்த செப்டம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தனர். இருந்தப்போதும் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கு இடையேயான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதையடுத்து வருகின்ற சனிக்கிழமை விடுமுறையா? என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர். இது குறித்து மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் பொதுவிடுமுறை அளித்து நிதி அமைச்சகம் அறிவித்ததாக வெளியான சமூக ஊடக செய்திகள் போலி என தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமைகளில் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக எந்தவொரு அறிவிப்பையும் நிதி அமைச்சகம் வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நடைமுறை என்ன?

நாடு முழுவதும் உள்ள அனைத்து பொத்துறை வங்கிகளுக்கும், தற்போதைய நடைமுறைப்படி ஒவ்வொரு மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் 1-வது, 3-வது மற்றும் 5-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. இந்நிலையில் தான் வங்கிகளுக்கு 5 நாள் வேலை வாரம் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்துவிட்டதாக கூறுவது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V