அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

டப்ளின் விமான நிலையத்தில் குமார் சங்கக்கார எதிர்நோக்கிய பாரபட்சம்

அயர்லாந்தின் டப்ளின் நகரிலுள்ள விமான நிலையத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் அவரது குடும்பம் எதிர்நோக்கி பிரச்சினை, தற்போது அதிக பேசுப் பொருளாகியுள்ளது.

ரயன் ஏயார் (Ryanair) விமான நிறுவனத்தின் தரைப் பணியாளர்கள் தனது குடும்பத்தினரிடம் பாரப்பட்சத்துடன் நடந்துக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாகவே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவமானது, தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டப்ளின் விமான நிலையத்தில் ரயன்ஏயார் விமான நிறுவனத்தின் நுழைவாயில் பணியாளர்களினால் இதுபோன்ற அனுபவத்தைப் பெற்ற பயணிகள் வேறு யாரேனும் இருக்கின்றீர்களா? என குமார் சங்கக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.

“டப்ளினில் ரயன்ஏர் நிறுவனத்தின் பாரபட்சமான நுழைவாயில் பணியாளர்களை எதிர்கொண்ட அனுபவம் வேறு யாருக்காவது உள்ளதா? நானும் எனது குடும்பத்தினரும் தற்போது அத்தகைய அனுபவத்தை எதிர்கொண்டோம். அது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது”

தனது குடும்பத்தினரிடம் பணியாளர்கள் நடந்துகொண்ட விதம், நடைமுறைகளைக் கையாண்ட விதம் மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய அச்சுறுத்தும் நடத்தை ஆகியவற்றை அவர் விமர்சித்துள்ளார்.

“எந்தவொரு பயணிக்கும் இவ்வாறான நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. டப்ளினில் எனக்கு ஏற்பட்ட முதல் மோசமான அனுபவம் இது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களையோ அல்லது பணியாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டுக்கான காரணத்தையோ முன்னாள் கிரிக்கெட் வீரர் வெளியிடவில்லை.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh