அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

யாழ்ப்பாணத்தில் திலீபனின் சிலையை அகற்றிய போலீஸார் – போராட்டத்தை ஆரம்பித்த தமிழர்கள்

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தியாகதீபம் திலீபனின் சிலையை போலீஸார் அகற்றியமை, பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தியாகதீபம் திலீபனின் நினைவுத் தினத்தை முன்னிட்டு கடந்த 12 நாட்களாக இந்த சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நல்லூர் பகுதிக்கு வருகைத் தந்த போலீஸார், அங்கு நிருவப்பட்டிருந்த சிலையை இன்று (செப்.27) அதிகாலை 6.30 அளவில் அகற்றி எடுத்து சென்றுள்ளதாக தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

சுமார் 10 போலீஸ் அதிகாரிகள் வருகைத்தந்து, இந்த சிலையை அகற்றி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற உத்தரவின்றி, போலீஸார் தன்னிச்சையாக வருகைத் தந்து, தமது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சிலையை பலவந்தமாக அகற்றியுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

யார் இந்த தியாகதீபன் திலீபன்?

திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராவார்.

இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பிரவேசித்த 1987ம் ஆண்டு காலத்தில், இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், தனது உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்த தீலிபன், இறுதியில் போராட்டத்திலேயே உணவின்றி, உயிர் துறந்தார்.

திலீபனின் உயிர் பிரிந்ததை தொடர்ந்து, இந்திய அரசாங்கமே திலீபனை இறக்க செய்ததாக கூறி, விடுதலைப் புலிகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையில் பின்னரான காலத்தில் மோதல் அதிகரிக்க பிரதானமான காரணமாக அமைந்திருந்தது.

திலீபனின் உயிரிழப்பின் பின்னர், திலீபனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு லெப்டினன் கேணல் என பட்டம் சுமத்தியது.

ஐந்து அம்சக் கோரிக்கை

01.மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
02.சிறைகளிலுள்ளம், ராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
03.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
04.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.
05.தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

என்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, தனது உயிரை தமிழர்களுக்காக தியாகம் செய்திருந்தார்.

1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தனது போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், வருடாந்த திலீபனை நினைவுகூறும் நிகழ்வுகள் நடாத்தப்படுகின்ற பின்னணியிலேயே, இம்முறை அவரது சிலை அகற்றப்பட்டு சர்ச்சையாக சூழ்நிலை உருவாகியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh