அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அரவிந்த டி சில்வாவின் 40 மில்லியன் ரூபா பணத்தை அரசுடமையாக்க உத்தரவு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோரின் 40 மில்லியன் ரூபா பணத்தை அரசுடமைக்குவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்டதாக கூறப்படும் மோசடி வழக்கின் சந்தேகநபரான அந்த நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவை பிணையில் விடுவிக்க பிணை நிபந்தனைகளுக்கு கையெழுத்திட்ட சம்பவத்தை அடுத்தே, அரவிந்த டி சில்வாவின் 40 மில்லியன் ரூபா பணத்தை அரசுடமைக்கும் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க வழக்கு விசாரணைகளுக்கு வருகைத் தராத நிலையில், அவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க, நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடொன்றில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவை 20 மில்லியன் ரூபா வீதமான இரண்டு சரீர பிணைகளின் கீழ் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இந்த பிணை நிபந்தனைகளில் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியிலேயே சந்தேகநபர் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காததை அடுத்து, இந்த பிணை தொகையை அரசுடமையாக்குதவற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, 20 மில்லியன் ரூபா பணத்தை செலுத்துவதாக அரவிந்த டி சில்வா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

எஞ்சிய 20 மில்லியன் ரூபா பணத்தை ஒக்டோபர் மாதம் 14ம் தேதி செலுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தமையினால், அவரை கைது செய்வதற்கான உத்தரவை சர்வதேச போலீஸாருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கலின் பிரதான சந்தேகநபரான கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில், தனது உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, அவர் நாட்டிற்கு வருகைத் தர அச்சம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh