அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

உத்தராகண்டில் தீண்டாமை குற்றச்சாட்டு: மாநிலங்களவையில் கார்கே பரபரப்பு புகார்!(கார்ட்டூன்)

உத்தராகண்டில் தான் பேசிய இடத்தை பாஜகவினர் சுத்தம் செய்ததாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவையில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகவே, தான் பேசி முடித்த பிறகு தான் பேசிய இடத்தில் சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கார்கே குற்றம்சாட்டினார். பாஜகவைச் சேர்ந்தவர்கள் தீண்டாமை நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, பாஜக தீண்டாமையை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, தீண்டாமை என்பது பாவச் செயல் என்றும், அதனை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் மாநிலங்களவையில் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Ashika Kumar

Ashika Kumar