அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தென்றலோடு கலந்த காந்தக்குரல்; தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எஸ். ஜானகி மறைவு!

தனிமை, சோகம், மகிழ்ச்சி, ஏக்கம், காதல், காதல் தோல்வி, குடும்ப வாழ்க்கை, அண்ணன் தங்கை பாசம், நண்பர்களின் உற்சாகம் என நாம் அன்றாடம் சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் நமக்கு உற்ற தோழனாக வருவது இசை மட்டும் தான். அதிலும் சில பாடகர்களின் குரல் என்றைக்கும் நம்மை விட்டு நீங்காது. அப்படி தன்னுடைய இனிமையான குரலினால் பல கோடி ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கும் தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எஸ். ஜானகி அம்மா இன்று காற்றோடு கரைந்து விட்டார். வயது மூப்பின் காரணமான தன்னுடைய 88 வது வயதில் ரசிகர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி சென்றுள்ள ஜானகி அம்மாவின் வாழ்க்கை மற்றும் திரையுலக இசைப் பயணம் குறித்த சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே…

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற கிராமத்தில் ராமமூர்த்தி- சத்யவதி தம்பதிகளுக்கு கடந்த 1938 பிறந்தார் எஸ். ஜானகி. சிறு வயதில் இருந்தே பாடத்தொடங்கி இவர், நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசை பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் சைன்னைக்கு இடம் பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். கடந்த 1957 ஆம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமான நாள் முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 17 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஏராளமான காலத்தால் அழியாத பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கினார். காதல், சோகம், தாய்மை, பக்தி, நாட்டுப்புறம் என எந்த வகை பாடலாக இருந்தாலும் தனது குரலால் உயிர் கொடுத்து பாடியவர் என்ற பெருமை அவருக்கே உரியது.

எஸ். ஜானகி தனது சிறப்பான குரல் வளத்திற்காக 4 முறை தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார். மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுகளின் பல மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது இசைப் பங்களிப்புக்காக எண்ணற்ற பாராட்டுகளும் விருதுகளும் அவரை வந்தடைந்துள்ளன.

தமிழில் அவர் பாடிய செந்தூரப் பூவே, இஞ்சி இடுப்பழகி, அழகிய கண்ணே, பூங்காற்று திரும்புமா உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. தலைமுறைகளைத் தாண்டியும் அவரது குரல் மக்களின் மனதில் நிலைத்திருக்கிறது.

மனதை மயக்கும் எஸ். ஜானகியின் குரல்….

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில என்ற பாடலை எப்போது கேட்டாலும் தென்றல் வந்து நம்மை வருடிச் செல்லும் அளவிற்கு இருக்கும் ஜானகியின் குரல். ஆயிரம் தாமரை மொட்டுகளே, பெண் காதலின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் சின்ன சின்ன வண்ணக்குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா, காதலர்களின் உணர்வுகளைத் தூண்டும் பனி விழும் மலர் வனம், கிராமத்து காதலை வசைப்பாடும் பொத்தி வச்ச மல்லிகை மெட்டு, காதோரம் லோழாக்கு கதை சொல்லுதம்மா, ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குது என்பது போன்ற பல பாடல்கள் என்றைக்கும் காதலர்கள் இசைப்பாடும் பாடல்களாக வலம் வருகிறது. 90 களில் மட்டுமல்ல இன்றைய காலத்து தலைமுறையினர் காதல் வயம் கொள்ள வேண்டும் என்றாலும் ஜானகி பாடிய பல பாடல்கள் தான் நிலைத்து நிற்கிறது.

அண்ணே போய் வரவா, அழுது போய் வரவா, மண்ணே போய் வரவா, மாமரே போய் வரவா என்ற கவிஞர்களின் வார்த்தைக்கு தன்னுடைய குரலாய் உயிர்க் கொடுத்து அண்ணன் தங்கை பாசத்தை 100 சதவீத வெளிப்படுத்தி இருப்பார் ஜானகி அம்மா என்றழைக்கப்படும் ஜானகி.

“நான் போன பின்பும், நீ வாழ வேண்டும்.. எந்தன் மூச்சு உனக்குள்ளும் இருக்கு.”. என்று ஜானகி அம்மா பாடிய பாடலைப் போன்று இந்த மண்ணுலகை விட்டு அவர் பிரிந்தாலும், இன்றைக்கும் என் இசையால் நிலைத்து நிற்பேன் என்கிறார். விண்ணுலகிற்கு சென்றாலும் மண்ணுலகில் அவர் விட்டு சென்ற ஒவ்வொரு பாடல்களும் இன்றைக்கும் நம் மனதை இதமாக்குகிறது என்று சொன்னால் நிச்சயம் அது மிகையாகாது…

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V