அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

கொளத்தூரில் தவெக வேட்பாளர் வெற்றி செல்லுமா? மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 82 ஆயிரத்து 997 வாக்குகள் பெற்றி பெற்றார். 8 ஆயிரத்து 795 வாக்குகள் வித்தியாத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது இடத்தை பெற்றார். இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, கொளத்தூரில் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த மாதம் 29 ஆம் தேதி நடந்தது. சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சமீரன் முன்னிலையில் 3 நாட்கள் ஆய்வுப்பணிகள் நடைபெற்றன. இந்த ஆய்வின் முடிவில் வெயியிட்ட அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி தேர்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆய்வு சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவின் முடிவுகள் மற்றும் விவிபேட் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் அனைத்தும் சரியாக இருந்தது உறுதி செய்யப்பட்டது.

சரிபார்ப்பு பணியின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் முழுமையாக விளக்கிக் காண்பிக்கப்பட்டன. விண்ணப்பதாரர் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பிற போட்டியிட்ட வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்கள் உடனுக்குடன் அளிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மற்றும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சரிபார்ப்பு நடைமுறைகளின்படி முறையாக செயல்படுகின்றன என்று பெல் நிறுவன பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழின் நகல் விண்ணப்பதாரர் வேட்பாளருக்கு வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், குறிப்பிட்ட 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை, விவிபேட் (VVPAT) ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்புதான் விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மே 7 ஆம் தேதி விண்ணப்பித்தாகவும், ஆனால் 45 நாட்களுக்குப் பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிப்பார்க்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்கள். எனவே இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனவும், ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது என தெரிவித்தார். எம்.எல்.ஏ வெற்றி செல்லாது என அறிவிக்க முடியாது என்றும் இதை தேர்தல் வழக்காகத் தான் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டது. ஒருவேளை இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், இதே கோரிக்கையுடன் பலர் மனுத்தாக்கல் செய்ய நேரிடும் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V