அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கையில் பெட்ரோல் அகழ்வு சுற்று சூழலுக்கு ஆபத்தா? – மக்கள் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்கின்றது கத்தோலிக்க சபை

இலங்கைக்கு சொந்தமான மன்னார் வலைக்குடா பகுதியில் பெட்ரோலிய அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன்படி, மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு அண்மையில் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த விடயம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.

மன்னார் வலைகுடாவில் நான்கு ஆய்வுத் தொகுதிகள்.

மன்னார் வலைகுடாவில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவை உள்ளடக்கிய வகையில் நான்கு ஆய்வுத் தொகுதிகள் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு ஆய்வுகளுக்காக வழங்கப்படவுள்ளன.

இயற்கை எரிவாயு மற்றும் திரவ ஹைட்ரோகார்பன்கள் இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக கண்டுபிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இந்த பகுதிகளில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னணியிலேயே, இந்த நடவடிக்கைகளில் சர்வதேச நிறுவனங்களை உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் படுகைப் பகுதியில் ஒப்பீட்டளவில் பெருமளவு ஆய்வுகள் நடாத்தப்படாத நிலையில், நவீன புவியியல் ஆய்வுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை கொண்ட ஆய்வுகளின் ஊடாக சர்வதேச நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவிக்கின்றார்.

அத்துடன், மன்னார் படுகையில் தற்போது தம்வசமுள்ள புவியியல் தொடர்பான தரவுகளை உரிய நிறுவனங்களுக்கு வழங்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் பெட்ரோலியம் மற்றும் 6 ரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு ஆகியன இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவாயுகளை மேம்படுத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக துளையிட்டு, பிரத்தெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க சபை இன்று வெளியிட்ட அறிக்கை

இலங்கை கத்தோலிக்க சபையின் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை இலங்கை கத்தோலிக்க சபை இன்று வெளியிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் மன்னார் வலைகுடா பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள பெட்ரோலிய அகழ்வு தொடர்பில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மன்னார் தீவுப் பகுதியில் மணல் அகழ்வுகளின் ஊடாக இடம்பெறுகின்ற பாரிய சுற்றாடல் பாதிப்புக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க சபை அவதானம் செலுத்தியுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் கத்தோலிக்க சபை குறிப்பிடுகின்றது.

அத்துடன், மன்னார் படுகையில் முன்னெடுக்கப்படவுள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஆய்வுகள் குறித்தும் இலங்கை கத்தோலிக்க சபை மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஊடாக பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு கிடைக்கின்ற போதிலும், உரிய சுற்றாடல் ஆய்வுகளின் ஊடாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் தெளிவுப்பட வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என இலங்கை கத்தோலிக்க சபை குறிப்பிடுகின்றது.

மேலும், இவ்வாறான அபிவிருத்தி பணிகளுக்கு முன்னதாக பிரதேச மக்களின் கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த சபை கூறுகின்றது.

இந்த நடவடிக்கைகளின் ஊடாக மன்னார் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் நீரியல்வளத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க சபை கோரிக்கை விடுக்கின்றது.

அதேவேளை, மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பிலும் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டுள்ளது.

உறுதிவழங்கப்பட்ட விதத்தில் அமைக்கப்படவுள்ள காற்றாலைகளுக்கு மேலதிகமாக வேறு காற்றாலைகள் அமைக்கப்படக்கூடாது என கத்தோலிக்க சபை வலியுறுத்தியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh