அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

நெடுந்தீவு கடலில் 11 இந்திய மீனவர்களுடன் விபத்துக்குள்ளான படகு: மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி படகு ஒன்று, 11 பேருடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையினர் தற்போது மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு, பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

படகில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

அழைத்து வரப்படும் இந்திய மீனவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, கடற்றொழில் திணைக்க அதிகாரிகளிடன் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of TNC Tamil Desk

TNC Tamil Desk