இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிகாலை 2.55 மணிக்கு EOS-05 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. சுமார் 2,367 கிலோ எடை கொண்ட EOS-05, இந்தியாவின் முதல் பிரத்யேக புவி-படமெடுப்பு செயற்கைக்கோளாகும். ஏவப்பட்ட சுமார் 18 நிமிடங்களில், செயற்கைக்கோள் திட்டமிட்ட துணை புவி-ஒத்திசைவு மாற்றுச் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இது வழக்கமான குறைந்த புவி சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து சுமார் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் இ.ஓ.எஸ் 5 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படுகிறது. இது ஜிஎஸ்எல்வி ரகத்தில் 19 வது ராக்கெட்டாகம்.
செயற்கைக்கோளின் சிறப்புகள்:
தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி – எஃப் 17 செயற்கைக் கோளானது இந்திய துணைக் கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்படவுள்ளது. மல்டி ஸ்பெக்டரல் மற்றும் ஹைப்பர் ஸ்பெக்டரல் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன கேமிராக்கள் இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ந்து கண்காணிக்கவுள்ளது. இதோடு புவியில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிப்பது, வானிலை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயனளிக்கும் வகையில் நிகழ்நேரத்து நெருக்கமாக உள்ள புகைப்படங்களையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் இந்தியாவின் முதல் பிரத்யேக இமேஜிங் செயற்கைக்கோள் என்ற சிறப்பை EOS-05 பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு பெருமை…
இன்றைக்கு மிகவும் நீள்வட்ட பாதையில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் இமேஜிங் செயற்கைக்கோள் என்ற சிறப்பை EOS-05 பெற்றுள்ளது. முன்னதாக 1536 கிலோ எடைக் கொண்ட செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது அதைவிட மிகவும் பருமனான 2369 கிலோ கிராம் நிறைய வேலைகள் செய்து அனுப்பி உள்ளோம். சுமார்
3600 கிமீ தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள் இந்தியா மற்றும் அருகில் உள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் உள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியர்களுக்கு மிகவும் பெருமையளிப்பதாகவே உள்ளது என பெருமிதம் கொள்கிறார் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்.
இஸ்ரோ தலைவர்