அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தங்கம் வாங்க வேண்டாம்; உலக சவால்களுக்கு மத்தியிலும் 7.8% ஜிடிபி வளர்ச்சி: மோடி பாராட்டு!

இந்தியாவில் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. உலகளவில் பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்கள் நிலவி வரும் சூழலிலும் இந்தியா வலுவான வளர்ச்சியை பதிவு செய்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுக்குறித்து இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், இந்திய பொருளாதாரத்தின் வலிமையையும் வளர்ச்சிக்கான வேகத்தையும் இந்த புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை, வர்த்தக சவால்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்தியிலும் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களைப் பாராட்டிய நநேந்திர மோடி:

மக்கள் சுதேசி மற்றும் சுயசார்பு ஆகியவற்றிற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்தால், 100 வது சுதந்திர தின ஆண்டில், இந்திய நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு வளர்ந்த இந்தியா கிடைக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் போர்கள், நிலையற்ற சூழல் போன்ற பல்வேறு உலக சவால்களுக்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கி கணித்தைதை விட இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியதற்கான நாட்டு மக்களை நான் பாராட்ட விரும்புகிறேன் என காணொளி காட்சி மூலம் மோடி கூறியுள்ளார். மக்களின் கூட்டு உறுதிப்பாடு மற்றும் முயற்சிகளால் இது சாத்தியமானது என்று தெரிவித்தார். இந்தியாவில் சிலர் எதிர்மறை எண்ணங்களையும் பொய்களையும் பரப்ப முயன்றாலும் நாடு தொடர்ந்து வளர்ந்து வருகிறது எனவும் கூறினார்.

அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம்…

நம்முடைய இந்திய பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க வேண்டும் என்றால், சுயசார்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் என்றும் அவசியமில்லாமல் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதையோ, வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துவதையோ அல்லது தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இளைஞர்களின் கனவுகள் நனவாக நமது கடின உழைப்பு தேவை என்றும் முயற்சிகளில் நாம் எந்தக் குறையும் வைக்கக்கூடாது என தெரிவித்தார். தனது அரசின் கொள்கைகள் சிறந்தவை மற்றும் நோக்கங்கள் தெளிவானவை என்றும், அதனால்தான் நாடு வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டி வருகிறது என்றும் மோடி கூறினார். மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற கவலைகளுக்கு மத்தியிலும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பார்ப்பை விட அதிகமாக 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. முந்தைய காலாண்டில் இருந்த 8.6 சதவீத என்ற மிக உயர்ந்த வளர்ச்சியிலிருந்து 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி வேகம் சற்று குறைந்திருந்தாலும், மோதல் சூழலால் எரிசக்திச் சந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையிலும், இந்த வளர்ச்சி விகிதம் எதிர்பார்ப்புகளை விட அதிகமாகவே இருப்பதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V