அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இன்று முதல் அரசியலில் துறவியாகிவிட்டேன்; இனி என்னிடம் அரசியல் பேச வேண்டாம் – பாமக நிறுவனர் ராமதாஸ்!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வன்னிய சமூக மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. சென்னையில் சுமார் 10 லட்ச மக்கள் புடைசூழ இக்கட்சியைத் தோற்றுவித்தார் ராமதாஸ். கட்சி தொடங்கிய ஆறு மாதத்திற்குள் வேலூர் தொகுதியில் உள்ள பெரமணநல்லூர் இடைத்தேர்தலைக் கண்டது. வெற்றி வாகை சூடாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றதால், யார்? என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். பின்னர் திமுக மற்றும் அதிமுக போன்ற பிராதன கட்சிகளுடன் கூட்டணி வைத்தும், தனித்தும் பல தேர்தல்களை பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்து வந்தது. தொடர்ச்சியாக 35 ஆண்டுகால கட்சியில் கடந்த 2024 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது.

ராமதாஸ் – அன்புமணி மோதல்:

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தவைலராக முகுந்தனை நியமித்ததிலிருந்து ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டது. எப்படி மகள் வழிப்பேரனை கட்சியில் சேர்த்த சில நாட்களில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படும் என முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தது. ராமதாஸ் தன்னைத் தானே பாமக தலைவர் என அறிவித்துவிட்டது அன்புமணிக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து முரண்பாடுகள் பெரிதாகின. பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டாமல் இருவர் தனித்தனி கூட்டணியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு பின்னர் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார் ராமதாஸ்.

இந்நிலையில் தான் தனது திருமண நாளையொட்டி ராமதாஸிடம் ஆசி வழங்க சென்றபோது இருவரும் இணைந்து விட்டனர். இரு அணிகள் ஒன்றிணைந்து மீண்டும் ஒரே பாமக ஆகிவிட்டது.

அரசியலை விட்டு விலகுகிறேன்..

தன்னுடைய 88 வயது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், இந்த நாளில் ஒரு நல்ல செய்தியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன் என ஆரம்பித்தார். என்னுடைய இத்தனை ஆண்டுகள் கால அரசியல் வாழ்க்கையை இன்று முதல் துறவரம் செய்கிறேன் என்றும், நான் இனி அரசியல் பேச மாட்டேன் எனவும் அரசியல் வழிகாட்டியாக மட்டுமே செயல்படுவேன் என தெரிவித்துள்ளார். ஆனால் என்னைப் பார்க்க வருபவர்களைப் பார்ப்பேன், நலம் விசாரிப்பேன் அதோடு நிறுத்திக் கொள்வேன். அரசியல் பேச வேண்டும் என்றால் அன்புமணி பார்ததுக் கொள்வார் எனவும் துணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V