அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இளையராஜாவுடன் மஞ்சணத்தி திரைப்படத்தின் மூலம் கைகோர்க்கும் மாரி செல்வராஜ்!

தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே தனக்கென ஓர் அங்கீகாரத்தைப் படைத்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்த இவர், திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எந்தளவிற்கு தன்னுடைய கல்வியறிவைப் பெற சிரமப்படுகிறார்கள் என்பதை நேர்த்தியான கதைக்களத்தில் வெளிக்கொணர்ந்தார். முதல் படமே பல வெற்றிகளைத் தேடி தந்ததின் பலனாய் தொடர்ச்சியாக பல கதைகளை உருவாக்க ஆரம்பித்தார். கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் காளமாடன் என மாரி செல்வராஜ் இயக்கிய அனைத்துத் திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக தன்னுடைய சொந்த ஊரில் நடந்த மற்றும் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை மையமாக வைத்து இயக்கி வரும் மாரி செல்வராஜின் 6 வது திரைப்படமாக மஞ்சணத்தி திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்ணன் திரைப்படத்தில் என் ஆளு மஞ்சணத்தி என்ற பாடல் அந்த மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக அமைந்தது. இந்த நிலையில் தன்னுடைய புதிய திரைப்படத்திற்கு மஞ்சணத்தி என பெயரிடப்பட்டுள்ளதால் நிச்சயம் முந்தைய படங்களைப் போன்று இதுவும் இயக்குநர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான தூத்துக்குடி – திருநெல்வேலி பகுதியை மையமாக வைத்து வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இளையராஜாவுடன் கைகோர்க்கும் மாரி செல்வராஜ்:

இசை ஜாம்பவான் இளையராஜாவுடன் சேர்த்து படம் இயக்குவது என்பது தன்னுடைய பெரிய கனவு என்றும், இதுவரை அவரை நான் பார்த்தது இல்லை. ஆனால் ஆசை மற்றும் ஏக்கம் அதிகமாகவே உள்ளது என்கிறார் மாரி செல்வராஜ். ஆனால் ஒட்டுமொத்த இசையாக இருக்கும் ஒருவரிடம் சென்று கதையை சொல்லும் போது நம்முடைய அனுபவம் பெரியதாக இருக்க வேண்டும். நாமும் நல்ல பக்குவம் பெற்றிருக்க வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. என்னுடைய கதையை சொன்னால் போதும். நிச்சயமாக அவர் நேர்த்தியாக செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக பெருமிதம் கொள்கிறார். இந்நிலையில் தான் மாரி செல்வராஜ் தான் இயக்கவுள்ள ஆறாவது திரைப்படத்தில் இசைஞானி இளைராஜாவுடன் இணையவுள்ளார். அதற்காக வீடியோ ஒன்று வெளியாகி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிறது. மஞ்சணத்தி திரைப்படத்தில் கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V