அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கையில் சீன குழுக்களுக்கு இடையில் மோதல் – கடத்தப்பட்ட ஒரு சீனப் பிரஜை சடலமாக கண்டெடுப்பு

சீன பிரஜைகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற துறைமுகர் நகரம்

இலங்கையில் சீன நாட்டு குழுக்களுக்கு இடையில் பாரிய மோதல் ஒன்று உருவெடுத்துள்ள நிலையில், இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் பகுதி நேற்றிரவு மூன்று சீனப் பிரஜைகள் வருகைத் தந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு வருகைத் தந்த மூன்று சீனப் பிரஜைகளும், துறைமுக நகரிலுள்ள பாலத்தின் மீது நின்ற நிலையில், மீன்பிடித்துக்கொண்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுமார் இரவு வருகைத் தந்த இந்த மூன்று சீனப் பிரஜைகளும், அதிகாலை வரை அந்த இடத்தில் நின்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வேன் மற்றும் கெப் ரக வாகனங்கள் இரண்டில் வருகைத் தந்த மற்றுமொரு சீனப் பிரஜைகள் குழுவொன்று, துறைமுக நகரில் நின்றுக் கொண்டிருந்த மூன்று சீனப் பிரஜைகள் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தாக்குதல் நடாத்தியமை அடுத்து, வாகனங்களில் வருகைத் தந்த சீனப் பிரஜைகளினால், குறித்து மூன்று சீனப் பிரஜைகளும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஒரு வாகனத்தில் இரண்டு சீனப் பிரஜைகளும், மற்றைய வாகனத்தில் ஒரு சீனப் பிரஜையும் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

எனினும், வாகனமொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 2 சீனப் பிரஜைகளும், துறைமுக நகரின் ஒரு பகுதியில் விடுவிக்கப்பட்டதுடன், மற்றைய வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டவர் விடுவிக்கப்படாத நிலையில் கடத்தல்காரர்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட இருவரும் கொழும்பு துறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, சீனப் பிரஜை ஒருவர் சடலமொன்று கண்கள் கட்டப்பட்ட நிலையில் எஹலியகொடை பகுதியிலிருந்து இன்று பிற்பகல் போலீஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர், கடத்திச் செல்லப்பட்ட நபர் என்பது முதல் கட்ட விசாரணைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு, எமது செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தியது.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சீனப் பிரஜைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடாத்துவதற்காக வருகைத் தந்ததாக கூறப்படும் சீனப் பிரஜைகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

எனினும், 10ற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் இந்த கடத்தலுடன் தொடர்புப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களின் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, சீன நாட்டு பிரஜை ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அநுர ஜனாதித் பண்டார கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சீன நாட்டு பிரஜை ஒருவர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களை எதிர்வரும் 27ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேகர இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீன நாட்டு பிரஜைகளுக்கு மத்தியில் இவ்வாறு ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் கடத்தல் சம்பவம் இலங்கையில் தற்போது பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh