அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழக எம்.எல்.ஏ களுக்கு நற்செய்தி; அரசு சார்பில் கார், உதவியாளர் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு!

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, தற்போது பல எம்.எல்.ஏ-க்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும் தொகுதி பணிகளை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் கடினமாக உள்ளதாகவும் லட்சமில்லாத ஆட்சி அமைய அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஆய்வு செய்த பின்னதாக தற்போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையிலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முழுவதும் மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் வாகனப்படியாக மாதந்தோறும் ரூ. 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், எம்.எல்.ஏகள் ஒவ்வொருவரும் உதவியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் எனவும் இதற்கு அரசு சார்பில் ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்களைத் தெரிவித்த எம்.எல்.ஏகள்…

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பையடுத்து எம்.எல்.ஏ கள் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக எம்.எல்.ஏ ஜோதிமணி பேசுகையில், நான் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற கோரிக்கை அடிப்படையில் நிறைவேற்ற தந்த முதல்வருக்கு மனமார்த்த நன்றி என தெரிவித்தார். என்னிடம் ஏற்கனவே மூன்று அல்லது நான்கு கார்கள் இருந்தாலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கிய காரில் எனது தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது ஒரு பெரிய கௌரவமாக இருக்கும் என மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார். பா.ம.க எம்.எல்.ஏ கணேஷ் குமார் பேசியதாவது, “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க வேண்டும் என்பது பட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை. முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பை மனதார வரவேற்று, பாராட்டுகிறோம் என்றார். அதுவும் முதல் முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக் கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் மட்டும் அல்ல அதன் எரிபொருள் மற்றும் உதவியாளர்கள் சேர்த்து வழங்கிய முதலமைச்சர் விஜய்-க்கு மனமார்ந்த நன்றியை பா.ம.க சார்பில் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், இத்தனை ஆண்டுகள் கழித்து ஆவின் கொள்முதலை ஏற்றிக் கொடுத்திருக்கிறார் மற்றும் மருத்துவ அறிவிப்புகளை கொடுத்திருக்கிறார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் ஒரு காரும், உதவியாளரும் தந்திருக்கிறார். அவரை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் என்றும் எம்.எல்.ஏ-க்களு மட்டும் அல்ல மறைமுகமாக பலருக்கும் பயன் தரும். ஓட்டுநர்கள் உட்பட பலருக்கும் பயன்தரும் என்று தன்னுடைய வாழ்த்துக்களைப் பகிர்ந்தார்.


Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V