அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கை மருத்துவ துறையில் புதிய சாதனை – 3.100 கிலோகிராம் சிறுநீரக கல்லை அகற்றிய மருத்துவர்கள்

உலகிலேயே மிகப் பெரியது என பதிவுகளின் ஊடாக நம்பப்படும் சிறுநீரகக்கல் ஒன்று, சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிய, வரலாற்று சாதனையொன்று இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

திருகோணமலை பொது மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி நடாத்தப்பட்ட சத்திர சிகிச்சையின் ஊடாக இந்த கல் அகற்றப்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் பாலகிருஸ்ணன் பிரகலநாதன் தெரிவிக்கின்றார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர் பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிற்றில் வெளிபுறத்தில் தென்படும் வகையிலான கட்டியொன்று காணப்பட்டதை மருத்துவர்கள் அவதானித்துள்ளனர். அத்துடன், சிறுநீர் கழிப்பதிலும் அவர் சிரமப்பட்டு வந்ததை மருத்துவர்கள் அவதானித்த நிலையில், மருத்துவ பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.

ஸ்கேன் பரிசோதனைகள், எக்ஸ்ரே பரிசோதனைகள் நடாத்தப்பட்டதில், சிறுநீரக கல் இருப்பது மருத்துவர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சிறுநீரக விசேட நிபுணராக மருத்துவர் பாலகிருஸ்ணன் பிரகலநாதனிடம், இந்த நோயாளர் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜுன் மாதம் முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட இவர், பல்வேறு பரிசோதனைகள் நடாத்தப்பட்ட பின்னரே சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாதம் ஏற்பட்டமை உள்ளிட்ட சில பிரச்சினைகள் காணப்பட்டதை அடுத்து, சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான உடல் வலிமையில் அவர் இருப்பதை உறுதி செய்யும் சோதனைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே, கடந்த 14ம் தேதி சத்திர சிகிச்சை நடாத்தப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை மணிநேரம் நடாத்தப்பட்ட சத்திரசிகிச்சையில், 3 கிலோ 100 கிராம் எடையுடைய கல்லொன்றே வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாக டொக்டர் பாலகிருஷ்ணன் பிரகலாதன் தெரிவிக்கின்றார்.

குறித்த நபர் பக்கவாதம் காணப்பட்டமையினால், அவரின் உடல் நிலை வழமைக்கு திரும்பவில்லை என்றாலும், அவரின் ஆரோக்கியமாக உள்ளார் என மருத்துவர் குறிப்பிடுகின்றார்.

குறித்த நபருக்கு 1998ம் ஆண்டு காலப் பகுதியில் சிறுநீரக கல்லொன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இந்த கல் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த கல் வளர்வதற்கு சுமார் 5 முதல் 10 ஆண்டுகள் வரை எடுத்திருக்கக்கூடும் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.

பிரேஸில் நாட்டில் 2003ம் ஆண்டு இதே போன்றதொரு கல் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருந்தது.

பதிவுகளின் பிரகாரம், அந்த கல்லானது 1.9 கிலோகிராம் எடையுடையது என கூறப்பட்ட நிலையில், தற்போது 3.100 கிலோகிராம் எடையுடைய கல் அகற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் சத்திரசிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்ட சிறுநீரக கல், உலக சாதனை புத்தகத்தில் பதிவதற்காக கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh