தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் ரயில்வே பாலங்கள் தேவைக் குறித்து கேள்வி எழுப்பினர். குறிப்பாக முன்னாள் முதல்வரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் போது கடும் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினால். ஆனால் இதுவரை இதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லையென்றும், கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதே போன்று கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் லதா, திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி உள்ளிட்டோரும் தங்களது தொகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக தங்களுடைய கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலம், ரிங்ரோடு அமைப்பது தொடர்பாக பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்பிரச்சனையை சரி செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். . மேலும், திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை வருவதாக இருந்தாலும் மதுரவாயில் வழியாக இருந்தாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவை எல்லாம் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 8 வழி சாலை அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதற்காக அடுத்த மாதம் நடைபெற உள்ள மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் இதற்காக விரைவில் திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி தொடங்கவுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 30 ஆண்டுகளுக்குள் எவ்வித போக்குவரத்து நெரிசல் இன்றி இருப்பதற்கான வாய்ப்பாகவும் அமைவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.