யாழ்ப்பாணம் – அநுராதபுரம் பிரதான வீதியின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளும், தனியார் பேருந்தொன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்து இன்று (10) காலை இடம்பெற்றதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் மேலும் 50திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தோர் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான பேருந்துகள் முதலில் மோதுண்டதுடன், அதனைத் தொடர்ந்தே தனியார் பேருந்து மோதுண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அநுராதபுரம் ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

Views: 116