செயற்கை நுண்ணறிவு (AI) வரம்பை மீறுகிறதா என்பது குறித்த விவாதம் தற்போது உலகளவில் மிகவும் தீவிரமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் வரும்பொழுது, அதற்கு எதிர்ப்புக்கள் வருவதை இந்த உலகம் பார்த்துள்ளது. இருந்தபோதிலும், எதிர்காலத்தில் மனித அறிவை விட மேம்பட்ட ‘பொது செயற்கை நுண்ணறிவு’ (AGI) உருவானால், அது மனிதர்களின் கட்டளைகளை மீறிச் செயல்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
மருத்துவம், பாதுகாப்பு துறைகளில் செயற்கை நுண்ணறிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை முன்கூட்டியே கண்டறிவது, புதிய மருந்துகளை உருவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு பெரும் புரட்சியை செய்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறைகளில், கோடிங் செய்யும் மொழிகளை (large language model) செயற்கை நுண்ணறிவு (AI) கற்று விரைவாக, எளிதாக பயனாளர்களுக்கு பதிலை தருகிறது. பல மணி நேரம் செய்ய வேண்டிய கடினமான மற்றும் ஆபத்தான வேலைகளை மனிதர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு எளிதாக செய்து முடிக்கிறது.

இது தொழில்நுட்ப துறைக்கு சாதகமாக இருந்தாலும், சமூகரீதியாக வேலைவாய்ப்பை பறித்து, லட்சக் கணக்கில் வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது எழுத்து, வடிவமைப்பு, கோடிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற துறைகளில் மனிதர்களுக்குப் பதிலாக AI பயன்படுத்தப்படுவதால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
உண்மையான வீடியோ மற்றும் ஆடியோவைப் போலவே AI மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்பம், அரசியல் மற்றும் தனிநபர் வாழ்க்கையில் பெரிய குழப்பங்களை ஏற்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு மாடல்களைப் பயிற்றுவிக்க இணையத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் படைப்புகள் அவர்களின் அனுமதியின்றியே பயன்படுத்தப்படுகின்றன. மேலும் குரல் மற்றும் உருவத்தை மாற்றி நிதி மோசடிகள் உள்ளிட்ட பலவித மோசடிகள் அதிகரித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவின் (AI) வேகமான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், அதன் ஆபத்துகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் உலக நாடுகள் பல புதிய சட்டங்களையும் விதிமுறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. உலகின் முதல் மற்றும் மிகவும் கடுமையான விரிவான சட்டமாக 2026 ஆகஸ்ட் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘AI சட்டம்’ (EU AI Act) முழுமையாக அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்கு(AI) என தனிச் சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை என்றாலும், தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT Rules) 2026-ல் திருத்தப்பட்டு கடுமையாக்கப்பட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு என்பது நாம் கொடுக்கும் தகவலை கொண்டு வடிவமைக்கப்ப்டும் ஒரு செயலி அதனை மனிதன் எவ்வாறு பயன்படுத்துவான் என்பதை பொருத்தே அதன் செய்ல்பாட்டை நாம் நிர்ணயிக்க முடியும்.