அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

அதிமுக எம்.எல்.ஏ கள் ராஜினாமா; பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் அதிமுக 41 இடங்களைக் கைப்பற்றியது. இதில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சி அமைவதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறி தவெக அரசிற்கு ஆதரவு அளித்ததாக கட்சி தாவல் சட்டம் பாய்ந்த நிலையில், தகுதி நீக்க வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த சூழலில் அதிமுக கொறாடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ஏ ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் உத்தரவு செல்லுப்படியாகாது என்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ களின் குதிரை பேரம் நடந்தது என்று ராஜினாமா நடந்த சில நிமிடங்களிலேயே தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெக இணைந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுக்குறித்து பேரவைத் தலைவர் முழுமையாக விசாரணை நடத்தவில்லை என்று அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பின்னர் பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்துக் கொண்டே வேறு கட்சிக்கு அவர்கள் போகவில்லை. அரசியல் சாசனப்படி பதவி விலகிய பின்னதாக தான் சென்றுள்ளார். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்தனர். இதோடு இவர்களின் ராஜினாமா ஏற்றுக்கொண்டதால் தகுதி நீக்க நடவடிக்கை என்பது இல்லாமல் போய்விடாது. குதிரைபேரமா? அல்லது சுய விருப்பமா என்பதை ராஜினாமா செய்யும் போது ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிமுகவின் 6 எம்.எல்.ஏகள் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றது சரி தான் என்றும், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் அவர்களின் ராஜினாமாலை ஏற்க தடையில்லை. இது சட்டப்படி செல்லுப்படியானது என தெரிவித்தார்கள். ஆனாலும் தகுதி நீக்க நடவடிக்கை பற்றிய முடிவை பேரவைத் தலைவர் 2 மாதங்களில் எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V