அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கையை நோக்கி அதிகளவில் படையெடுக்கும் இந்தியர்கள்

இலங்கையின் சுற்றுலாத்துறை நாளுக்கு நாள் பாரிய வளர்ச்சியை கண்டு வருகின்ற நிலையில், இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இந்தியா பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் 1,829,772 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவிக்கின்றது.

இதில் முதல் 9 மாதங்கள் வரையான தரவுகளின் பிரகாரம், இந்தியாவிலிருந்தே அதிகளவிலாக சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இதன்படி, இந்தியாவிலிருந்து ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 25ம் தேதி வரையான காலம் வரை 488,838 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவிக்கின்றது.

இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பிரித்தானியாவிலிருந்து 170,844 சுற்றுலா பயணிகளும், சீனாவிலிருந்து 120,961 சுற்றுலா பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து வருகைத் தந்தவர்களின் அதிகளவானோர் விடுமுறைகளை கழிப்பதற்காக இலங்கையை நோக்கி வருகைத் தந்துள்ளனர்.

ஏனைய நாடுகளிலிருந்தும் அதிகளவானோர் விடுமுறையை செலவிடுவதற்காகவே இலங்கையை நோக்கி வந்துள்ளமை தரவுகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh