அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உள்ளது இந்தியா – 9 மாதங்களில் 13.6 மில்லியன் அமெரிக்க டாலர் தாண்டி சாதனை

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானமானது, 13,612 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிக்கின்றது.

இதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான 9 மாத காலப் பகுதியில் வர்த்தக பொருட்கள் ஏற்றுமதியின் ஊடாக 10,761 மில்லியன் டாலர் வருமானமும், சேவை ஏற்றுமதியின் ஊடாக 2,850 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன், வரலாற்றின் முதல் தடவையாக 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானமானது, 1,691 அமெரிக்க டாலர் வரை அதிகரித்துள்ளது.

2025ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருமானமானது, 17 வீதமான அதிகரிப்பு என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

செப்டம்பர் மாதத்தின் மாத்திரம் வர்த்தக பொருட்களின் ஏற்றுமதியின் ஊடாக 1,385 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.6 வீத முன்னேற்றம் என அவர் கூறுகின்றார்.

மேலும், இந்த மாதத்தில் சேவைகளின் ஏற்றுமதியின் ஊடாக 306 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு அதிகளவிலான பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இதன்படி, அமெரிக்காவிற்கு கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான 9 மாத காலப் பகுதியில் 2,252.99 மில்லியன் அமெரிக்க டாலர் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த 9 மாத காலப் பகுதியில் அமெரிக்காவிற்கான சேவை ஏற்றுமதியின் ஊடாக 281.84 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

இந்தியாவிற்கு கடந்த 9 மாதங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் ஊடாக 889.84 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்துள்ள அதேவேளை, சேவை ஏற்றுமதியின் ஊடாக 113.22 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு கடந்த 9 மாத காலப் பகுதியில் 654.36 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கான சேவை ஏற்றுமதியின் ஊடாக 71.71 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.

தைத்த ஆடைகள் மற்றும் துணிகளின் ஏற்றுமதியின் ஊடாகவே அதிக வருமானத்தை இலங்கை ஈட்டியுள்ளதுடன், இரண்டாவதாக தேயிலை ஏற்றுமதியின் ஊடாக அதிக வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆடை ஏற்றுமதியின் ஊடாக கடந்த 9 மாத காலப் பகுதியில் 3,783.76 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன், தேயிலை ஏற்றுமதியின் ஊடாக 1083.58 மில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது.

அதைத் தவிர, தென்னை சார்ந்த பொருட்கள், இறப்பர், கடல் உணவுகள், மரக்கறி வகைகள், பழ வகைகள், பூக்கள், இரத்தினக்கற்கள், கனிய வளங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் ஊடாக இலங்கை பாரிய வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து பொருட்கள் சேவைகள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளின் ஊடாக கிடைத்த வருமானம்.
இலங்கையிலிருந்து பொருட்கள் மற்றும் சேவைகளின் ஊடாக கிடைக்கப் பெற்ற வருமானம்
இலங்கை ஏற்றுமதியின் ஊடாக 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளின் செப்டம்பர் மாதத்தில் பெற்றுக்கொண்ட வருமானம்

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh