இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப் பிரிவிற்கு சொந்தமான ‘INS TIR’, ‘INS SUJATA’ மற்றும் ‘ICGS SARATHI’ ஆகிய கப்பல்கள், அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளன.
கொழும்பு துறைமுகத்தை நேற்றைய தினம் (ஒக்டோபர் 26) வந்தடைந்த இந்த கப்பல்களுக்கு, கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டது.

இவ்வாறு பயிற்சி பெறும் 135 அதிகாரிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘Training Ship’ வகையைச் சேர்ந்த ‘INS TIR’ கப்பலானது 107 மீட்டர் நீளமுடையதுடன், அதன் கட்டளை அதிகாரியாக கெப்டன் Tijo K Joseph கடமையாற்றுகிறார். அத்துடன், 102 மீட்டர் நீளமுடைய OPV வகையைச் சேர்ந்த ‘INS SUJATA’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டர் Jishnu Madhavan கடமையாற்றுவதுடன், 105 மீட்டர் நீளமுடைய CG OPV வகையைச் சேர்ந்த ‘ICGS SARATHI’ கப்பலின் கட்டளை அதிகாரியாக Commandant Kundan Singh கடமையாற்றுகிறார்.
இக்கட்டளை அதிகாரிகளுக்கும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வாவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்றைய தினம் (2026 ஒக்டோபர் 26) அக்கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மேலும், இக்கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு நாட்டு கடற்படைகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் அவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளதுடன், இக்கப்பல்களின் பயிற்சி நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கும் அது தொடர்பான தொழில்முறை அறிவை பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிட்டும்.
மேலும், இந்த கப்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் பயிற்சி பெறும் அதிகாரிகள் நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காக நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA’ போர்க்கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA (LCS 30)’ போர்க்கப்பல், விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்றைய தினம் (ஒக்டோபர் 26) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினரால் அக்கப்பல் கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது.
இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள Littoral Combat வகையைச் சேர்ந்த ‘USS CANBERRA (LCS 30)’ கப்பலின் நீளம் 127.6 மீட்டர்களாகும். இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் C Towles செயற்பட்டு வருகின்றார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்ட ‘USS CANBERRA (LCS 30)’ கப்பல், அப்போதிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கடற்படையில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு முன்னரும், 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி, இக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருந்தது.