அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

வண்டலூர் பள்ளி மாணவி விவகாரம்: “சிங்கப்பெண் படை எங்கே? முதல்வர் எங்கே?” – உதயநிதி ஸ்டாலின் !

சென்னை வண்டலூர் அருகே அரசுப் பள்ளி மாணவி தொடர்பான பாலியல் வன்கொடுமை புகார் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், “சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனாக இருப்பேன் மற்றும் அரணாக இருப்பேன் என்று கூறிய முதலமைச்சர் எங்கே?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கண்டிகை அரசுப்பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை புகாரில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து அரசுப்பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளி வளாகங்களிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தேவையில்லாமல் யார் வருகிறார்கள்? என்பதைக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு என தெரிவித்துள்ளார். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் – அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் – பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என விமர்சனம் செய்துள்ளார்.

இதனிடையே, தாம்பரம் காவல்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், புகார் கிடைத்த உடனேயே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதாகவும், பள்ளி மற்றும் சுற்றுப்புற CCTV காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதுவரை புகாரில் தெரிவிக்கப்பட்டபடி சம்பவம் நடைபெற்றதை உறுதிப்படுத்தும் ஆதாரம் கிடைக்கவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால், வண்டலூர் பள்ளி மாணவி விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே அரசியல் விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V