சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் முக்கியமான பகுதியாக உள்ள பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ ரயில் சேவை வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக அமையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளதால் இதற்கு மத்தியில் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். முதற்கட்டமாக சென்ட்ரல் முதல் பரங்கிமலை, விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இரண்டு வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. 2 ஆம் கட்டமாக ரூபாய் 63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118.9 கிமீ தொலைவில் மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலையில் 4 வது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 5 வது புதிய ரயில் வழி பாதை அமைக்கப்படுகிறது.
தற்போது பூந்தமல்லி–வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் கொண்ட ரயில் பாதையானது செயல்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில், மெட்ரோ ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி வருகின்ற அக்டோபர் 11 ல் தொடங்கி வைக்கிறார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின்னதாக பிரதமர் மற்றும் விஜய் ஒரே மேடையில் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பதுடன், அந்தப் புதிய வழித்தடத்தில் பயணிக்கவும் உள்ளார். இந்தத் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் விஜயும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பதுடன், அந்தப் புதிய வழித்தடத்தில் பயணிக்கவும் உள்ளார். இந்தத் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் விஜயும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நாளில் சென்னை ஐஐடி நடைபெறும் நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மூன்று தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
மெட்ரோ ரயில் பாதைக்கான வழித்தடம்:
பூந்தமல்லி–வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மொத்தம் 11 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. பூந்தமல்லி புறவழிச்சாலை, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம் மற்றும் வடபழனி ஆகிய பகுதிகள் இந்த வழித்தடத்தில் இணைக்கப்படுகின்றன.
இந்த மெட்ரோ பாதை பயன்பாட்டுக்கு வரும் போது, பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், மேற்கு சென்னை மற்றும் ஆர்காட் சாலையில் நிலவும் கடும் போக்குவரத்தை நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மெட்ரோ ரயில் சேவை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.