அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தரமற்ற பெருங்காயம்: எவரெஸ்ட், எல்ஜி நிறுவனங்கள் பெருங்காயம் விற்பனை செய்ய FSSAI தடை!

தர நிர்ணய விதிகளைப் பூர்த்தி செய்யாத கலவைப் பெருங்காயத்தை (Compounded Hing) தயாரித்ததாகக் கூறி, எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லால்ஜி கோதூ & கம்பெனி (LG Brand Unit) ஆகிய இரு முன்னணி மசாலா நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) விற்பனைத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுகர்வோர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் கலவைப் பெருங்காயத்தின் தரம் குறித்து FSSAI ஆய்வு மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சந்தையில் உள்ள முக்கிய பெருங்காய பிராண்டுகளின் தரத்தைக் கண்டறிய விரிவான கண்காணிப்பு நடவடிக்கையை FSSAI மேற்கொண்டது.இந்த ஆய்வில், எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்களின் பெருங்காய மாதிரிகள் அனுமதிக்கப்பட்ட தரநிலைக்குக் குறைவாக இருப்பது முதற்கட்ட ஆய்வகப் பரிசோதனைகளில் தெரியவந்தது.

பல இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு

இதையடுத்து, மும்பையில் உள்ள எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் மற்றும் LG Brand Unit ஆகியவற்றின் மத்திய உரிமம் பெற்ற உற்பத்தி மையங்களில் இருந்து FSSAI அதிகாரிகள் சட்டப்பூர்வமாக மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பினர்.மேலும், குஜராத் மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் இணைந்து, குஜராத்தின் உமர்காம் பகுதியில் உள்ள எவரெஸ்ட் நிறுவனத்தின் மாநில உரிமம் பெற்ற உற்பத்தி மையத்திலும் கூட்டு ஆய்வு நடத்தப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது சேகரிக்கப்பட்ட அனைத்து பெருங்காய மாதிரிகளும் தரநிலைக்குக் குறைவாக இருப்பது முதன்மை ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது.5% இருக்க வேண்டிய அளவு 0 முதல் 3% மட்டுமேFSSAI-யின் Food Products Standards and Additives Regulations, 2011 விதிகளின்படி, கலவைப் பெருங்காயம் என்பது மூலப் பெருங்காயம் (Raw Hing), மாவுச்சத்து மற்றும் மாவு உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வகையாகும்.இதில் பயன்படுத்தப்படும் மூலப் பெருங்காயத்தின் அளவு, இறுதி தயாரிப்பில் குறைந்தபட்சம் 5% ஆல்கஹால் கரையக்கூடிய சாறு (Alcohol Soluble Extract) இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.

ஆனால், எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்களின் தயாரிப்புகளில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஆல்கஹால் கரையக்கூடிய சாறு 0 முதல் 3% வரை மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டது.இதன் மூலம், நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளில் விதிமுறைகளின்படி சேர்க்க வேண்டிய மூலப் பெருங்காயத்தின் அளவு 30 முதல் 40% வரை குறைவாக இருந்திருக்கலாம் என FSSAI தெரிவித்துள்ளது.இதுமட்டுமின்றி, மும்பையில் உள்ள LG Brand Unit-ல் இருந்து தயாரிப்பு பொருட்களுடன் சேர்த்து 6 வகையான மூலப் பெருங்காய மாதிரிகளையும் FSSAI சேகரித்து பரிசோதித்தது.FSSAI விதிகளின்படி, மூலப் பெருங்காயத்தில் மாவுச்சத்தின் அளவு அதிகபட்சம் 1% மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், ஆய்வகப் பரிசோதனையில், LG நிறுவனத்தின் 6 வகையான மூலப் பெருங்காய மாதிரிகளிலும் 15% முதல் 32% வரை மாவுச்சத்து இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், மூலப் பெருங்காயத்தில் குறைந்தபட்சம் 12% ஆல்கஹால் கரையக்கூடிய சாறு இருக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.விற்பனைக்கு தடை ஏன்?பல இடங்களில் தயாரிக்கப்பட்ட கலவைப் பெருங்காயங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பூர்த்தி செய்யாதது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது.இதன் அடிப்படையில், மும்பையில் உள்ள எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் LG Brand Unit ஆகியவற்றின் கலவைப் பெருங்காயத்தை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது பொதுமக்களின் சுகாதாரத்தையும் நுகர்வோர் நலனையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கை என FSSAI குறிப்பிட்டுள்ளது.மேலும், விதிமீறல்களைச் சரிசெய்து தரநிலைகளுக்கு ஏற்ப கலவைப் பெருங்காயத்தை உற்பத்தி செய்வதற்கான விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு FSSAI உத்தரவிட்டுள்ளது.சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ள தரமற்ற தயாரிப்புகளை Voluntary Recall மேற்கொள்ளவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of பிரீத்தி காளியப்பன்

பிரீத்தி காளியப்பன்