அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

ரீல்ஸ்-காக மட்டுமே முதலமைச்சர் விஜய் பதிலுரைத்திருக்கிறார்! – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, மீட்புப்பணிகள் துறை உள்ளிட்ட துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களின் மீது இன்று தமிழக முதல்வர் விஜய் பதிலுரையாற்றினார். அப்போது திமுகவின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளிக்க முயன்றபோது பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், மனப்பாடம் செய்து ஒப்புவித்தல் போட்டியைப் போல, தவறான கருத்துக்களை முதலமைச்சர் முன்வைத்தார் என குற்றம் சாட்டினார். ஏற்கனவே சட்டப்பேரவையில் 15 கேள்விகளை முன்வைத்திருத்ததாகவும், அவற்றில் ஒரு கேள்விக்குக் கூட விஜய் பதிலளிக்கவில்லை என்றும் மக்கள் பிரச்சனைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்குப் பதிலாக ரீல்ஸ்க்காக பஞ்ச் டயலாக பேசுவது போன்ற அணுகுமுறையை முதலமைச்சர் விஜய் கடைப்பிடிப்பதாக விமர்சனம் செய்தார்.

இதோடு பஞ்ச் டயலாக் மற்றும் டைவர்ஷன் டேக்டிக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறார் எனவும், திமுகவினர் மீது ஏதேனும் வழக்குகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் நேற்று நடந்த கொலை பற்றி பேசமால் 1970க்கு சென்று மிசா, சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுகிறார் எனவும் விவாகரத்துக்குப் பிறகு திமுக மூன்று முறை ஆட்சியைப் பிடித்துள்ளது என தெரிவித்தார். கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச் மேன் வேலை பார்த்தவர்கள் தான் இந்த முதல்வர் என்றும், மிசாவைப் பற்றி எங்கள் தலைவரைப் பற்றி பேச 1 சதவீதம் கூட தகுதி இல்லை. மேலும் முதல்வர் விஜய் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என பேசினார். இப்படி மாறி மாறி முதல்வர் மற்றும் எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டு சோசியல் மீடியாவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V