அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

நாமல் ராஜபக்ஸ கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஸ இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு விமானங்களை கொள்வனவு செய்யும் சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஸ இன்று முற்பகல் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியிருந்தார்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமான நாமல் ராஜபக்ஸவிடம் சுமார் ஐந்து மணிநேரம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறான பின்னணியிலே நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 18ம் தேதி வரை நாமல் ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  

2013ம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 6 ஏ-330 ரக விமானங்களும், 8 ஏ-350 ரக விமானங்களும் கொள்வனவு செய்யும் போது, 02 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் லஞ்சமாக பெற்றுக்கொண்டிருந்தனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் கபில சந்திரசேன கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் பிணையில் விடுக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட கபில சந்திரசேன, கடந்த மே மாதம் 08ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததுடன், அது தற்கொலை என போலீஸார் பின்னர் அறிவித்திருந்தனர்.

இந்த ஏயார் பஸ் கொள்வனவு தொடர்பிலான நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் இரண்டாவது சந்தேகநபராக கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபரான ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோரை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரான்ஸிலுள்ள ஏயார் பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டிற்கு வருகைத் தந்து, லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஸ இன்று அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஸ என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh