அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

நேபாளத்தில் தொடர்பை இழந்துள்ள இலங்கை தமிழ் குடும்பம்

நேபாளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொண்ட குடும்பத்துடனேயே தொடர்புகள் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அவர்களது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியை வசிப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர் சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி ஷைலஜா மற்றும் அவர்களது இரு மகன்களான அஷ்வின், ஆருஷ் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா பயணமாக நேபாளம் மற்றும் கைலாஷ் மானசரோவர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

இவ்வாறு நேபாளம் சென்ற குடும்பத்தினர், அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு அல்லது மண்சரிவில் சிக்குண்டிருக்கலாம் என இலங்கையிலுள்ள அவர்களது குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

திபெத் – நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடிவரவு சோதனைச் சாவடியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தருணத்;திலேயே இவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு தொடர்பிழந்துள்ள தமது உறவினர்களை விரைவில் தம்முடன் தொடர்பினை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

கடந்த புதன்கிழமை காலை 7 மணியளவில் முரளிதரனின் குடும்பம் தம்முடன் காணொளி அழைப்பு மூலம் தொடர்புக் கொண்டு பேசியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட குடும்பத்தினர், அவுஸ்திரேலிய அரசாங்கம் தம்முடன் தொடர்பிலுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த அனர்த்தத்தினால் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்பட்டமை தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் பதிவாகவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்துடன், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை நிவாரண உதவித் திட்டமாக வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்துடன், நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh