அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ். பாபு போட்டியிட்டார். மு.க. ஸ்டாலினின் நீண்டகால அரசியல் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் வி.எஸ். பாபு 82, 997 வாக்குகள் பெற்று பெற்றார். இந்த நிலையில் விஎஸ் பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்கப்பட்டதாகவும், அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததாக தெரிவித்தார். அந்த ஆய்வின் போது பொறியாளர் ஒருவர் இருந்தார். அப்போது குறிப்பிட்ட ஆறு வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேடுகளின் ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியும் எவ்வித நடவடிக்கை இல்லை என தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேடுகளை சரிபார்க்க வேண்டும். மேலும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V