அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களில் ரூ.9,450 கோடியில் ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார அமைச்சரவைக் குழு கூட்டத்தில், மொத்தம் ரூ. 9,450 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள் அனைத்தும் 2030-31ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய வலையமைப்பில் சுமார் 410 கி.மீ. தூரம் கூடுதலாக இணைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஓப்புதல் அளித்துள்ள ரயில்வே திட்டங்கள்:

கும்மிடிப்பூண்டி – கூடூர் (3 மற்றும் 4வது வழித்தடம்): தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் இடையே 90 கி.மீ தூரத்திற்கு ரூ.2,229 கோடி மதிப்பில் அமைகிறது.

கரக்பூர் – பத்ரக் (ரனித்தால் – 4வது வழித்தடம்): மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா இடையே 173 கி.மீ தூரத்திற்கு ரூ.3,352 கோடி மதிப்பில் அமைகிறது.

பத்ரக் – ஹரிதாஸ்பூர் (4வது வழித்தடம்): ஒடிசாவில் 75 கி.மீ தூரத்திற்கு ரூ.1,583 கோடி மதிப்பில் அமைகிறது.
கட்டக் – பாரதீப் (பதாபந்தா – 3 மற்றும் 4வது வழித்தடம்): ஒடிசாவில் 72 கி.மீ தூரத்திற்கு ரூ.2,286 கோடி மதிப்பில் அமைகிறது.

சுற்றுலா தலங்கள் மற்றும் கிராமங்கள் பலனடையும்:


பிரதமரின் கதி சக்தி தேசிய பெருந்திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திட்டமிடலுடன் செயல்படுத்தப்பட உள்ளன. தற்போது ரயில்வே துறை அறிவித்துள்ள பல்வழிப்பாதை திட்டங்களால் ரயில் போக்குவரத்து திறன் அதிகரித்து, நெரிசல் குறைவதுடன் ரயில்களின் இயக்கத் திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மை மேம்படுத்த உதவியாக இருக்கும். மேலும், சுமார் 6,448 கிராமங்களைச் சேர்ந்த 60 லட்சம் மக்கள் மேம்படுத்தப்பட்ட ரயில் இணைப்பால் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் இதன் மூலம் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் போக்குவரத்துக்கு தடையற்ற இணைப்பு கிடைக்கும்.

சேவைப்போக்குரவத்துக்கு இடையூறின்றி இருக்கும் என்பதோடு குல்திஹா வனவிலங்கு சரணாலயம், பிதர்கனிகா தேசியப் பூங்கா, சந்திப்பூர் கடற்கரை, புலிக்காட் ஏரி, நெல்லப்பட்டு பறவைகள் சரணாலயம், வீரராகவப் பெருமாள் கோயில், தாபலேஸ்வர் கோயில், லலித்கிரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் ரயில்வே இணைப்பால் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்கும்:

நிலக்கரி, இரும்புத் தாது, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கண்டெய்னர்கள், வாகனங்கள், உணவு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் போக்குவரத்துக்கு இந்த வழித்தடங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 76 மில்லியன் டன் (76 MTPA) சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரயில் போக்குவரத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் எரிசக்தி திறன் கொண்ட போக்குவரத்து முறையாக இருப்பதால், நாட்டின் தளவாடச் செலவைக் குறைக்கவும் உதவும். இதன் மூலம் சுமார் 13 கோடி லிட்டர் எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு, சுமார் 65 கோடி கிலோ கார்பன் டை ஆக்சைடு (CO₂) வெளியேற்றம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2.60 கோடி மரங்களை நடுவதற்கு சமமான சுற்றுச்சூழல் பயனை அளிக்கும்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V