மாமல்லபுரம் அருகே கோவளத்தில் 31-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் நிரந்தர தலைவர் அமித்ஷாவாக இருந்தாலும், மாநில முதல்வர்கள் மாநாடு எங்கு நடைபெறுகிறதோ? அந்த மாநிலத்தின் முதல்வர் துணைத் தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி சென்னையில் நடைபெறும் 31 வது தென் மாநில முதல்வர்கள் மாநாட்டிற்கு ஜோசப் விஜய் துணைத் தலைவராக இருந்து கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் சம்மபந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.
தென் மாநில பிரச்சனைகள் குறித்து விவாதம்:
கோவளத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், காவிரி பிரச்சனை மற்றும் கர்நாடகாவில் 3 தமிழகர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் குறித்த விவாதம் உள்பட மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனை, காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது விவகாரம், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, வளர்ச்சித் திட்டங்கள், சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு போன்றவை குறித்து தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. இறுதியாக தென் மாநிலங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்வது உள்ளிட்ட பல மாநில பிரச்சனைகள் குறுித்து ஆலோசித்த பின்னதாக இதற்கான தீர்வு காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.