அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

காவிரி மேலாண்மை உத்தரவை ஏற்று தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கவும்; கர்நாடகவிற்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்!

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவிவருகிறது. இச்சூழலில் தான் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்திற்கு தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் வழக்கம் போல கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட மாட்டோம் என்று எதிர்ப்புகளைத் தெரிவித்தது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடகா செல்வதையும் அம்மாநில முதல்வர் வேண்டாம் என்ற வலியுறுத்தினர். இந்நிலையில் தான் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை என்று கூறி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

தண்ணீர் திறக்காதது ஏன்? நீதிபதிகள் கேள்வி:

விசாரணையின் போது, கர்நாடக அணையில் 76 சதவீத பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு உள்ளது என்றும் தீர்ப்பாய உத்தரவின் படி கிடைக்க வேண்டிய 64 டிஎம்சி தண்ணீருக்குப் பதிலாக 14 டிஎம்சி தண்ணீர் மட்டும் பெற்றுள்ளதாக தமிழக அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாக பின்பற்றவில்லை எனவும் தண்ணீர் கிடைக்காத காரணத்தினால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தனது உரிய பங்கைப் பெற கர்நாடகவிற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்காதது ஏன்? எனவும் இயற்கை கொடுத்த மழைநீரை முழுமையாக தேக்க முடியவில்லை என்ற காரணத்தால் திறந்துவிடப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதோடு மட்டுமின்றி இந்த விவகாரம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கர்நாடக அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V