அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

APJ Abdul Kalam: அறிவியலால் இந்தியாவை உயர்த்திய அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று!

மக்கள் மனதிலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் என்றைக்கும் ஒரு நாயகனாக வலம் வரக்கூடிய தலைவர்களில் ஒருவர் தான் இந்தியாவின் ஏவுகணை நாயகன் டாக்டர். ஏபிஜே. அப்துல்கலாம். இராமேஸ்வரம் தீவில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று. இந்நாளில் அப்துல் கலாம் குறித்த சில சுவாரஸ்சிய தகவல்கள் பற்றி இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் ஏவுகணை நாயகன்:

இந்தியாவின் ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி, அக்னி மற்றும் பிருத்வி போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமாக உருவாக்கியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று தற்போதும் அழைக்கப்படுகிறார். மேலும் இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓவில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனமான எஸ்எல்வி – 3 திட்டத்திலும் முக்கிய பங்காற்றினார். பின்னர் டிஆர்டிஓ வில் ஏவுகணை திட்டங்களை வழிநடத்தினார். இந்த செயல்பாடுகள் அனைத்தும் கிராமப்புறத்தில் இருந்து வரக்கூடிய பல இளைஞர்களுக்கு உத்வேகத்தை அளித்தார் அப்துல் கலாம்.

போக்ரான் அணு சோதனையில் அப்துல்கலாம்:

கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பொக்ரான்-II அணு சோதனையில் அப்துல் கலாம் தலைமை அறிவியல் ஆலோசகராகப் பணிபுரிந்து, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து இந்தியாவின் அணு ஆயுத வலிமையை வெற்றிகரமாக உலகிற்கு நிரூபித்துக்காட்டிய பெருமையான விஞ்ஞானிகளில் ஒருவராக திகழ்ந்தார் அப்துல்கலாம்.

அறிவியலில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த எழுத்தாளராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் அப்துல்கலாம். ஆம் அவர் எழுதிய அக்னி சிறகுகள், இந்தியா 2020, திருப்பு முனை போன்ற புத்தகங்கள் வாசகர்களுக்கிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதியாக கலாம்: கடந்த 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று யோசிப்பதோடு, இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று மாணவர்களிடம் நேரியாக உரையாடல் நடத்துவார். இவரின் செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒவ்வொரு முறையும் மாணவர்களிடம் பேசும் போது, வாழ்க்கையில் கனவு காணுங்கள். அந்த கனவுகளை நினைவாக்க உழையுங்கள் என்ற அவரது வார்த்தைகள் இன்றைக்கு இளைஞர்களிடம் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. “கனவு என்பது நீங்கள் தூங்கும்போது காண்பது அல்ல; உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே உண்மையான கனவு. என்று அடிக்கடி இந்த வாசகத்தைப் பயன்படுத்துவார். மேலும் “சூரியனைப் போல பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரிய கற்றுக்கொள்ளுங்கள்.” “இளைஞர்களின் கனவுகளே நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும்”, வாழ்க்கையில் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், இரண்டாவது முறை தோல்வியடைந்தால் முதல் வெற்றி உங்களுக்கு அதிர்ஷ்டத்தால் நேரிட்டது என்பார்கள், லட்சியத்தை அடைய வேண்டும் என்றால், அதற்கு ஒற்றை மனதில் முழு ஈடுபாடு இருக்க வேண்டும் என்பது போன்ற இவரின் பொன்மொழிகள் இன்றைக்கும் பலருக்கு உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

அறிவியல், கல்வி, எளிமை, தேசப்பற்று ஆகியவற்றின் அடையாளமாக வாழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜுலை 27 அன்று மேகலாயாவின் ஷில்லாங்கில் உள்ள இந்தியா மேலாண்மை நிறுவனத்தில் மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். எப்போதும் இந்தியாவின் எதிர்காலம் மாணவர்களிடம் தான் உள்ளது என்ற வார்த்தைகளோடு மாணவர்களை அதிகம் நேசிக்கும் அப்துல் கலாமின் இறுதி மூச்சில் கூட மாணவர்களுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V