அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கை சிறை கலவரம்; இந்தியர் ஒருவர் உட்பட 28 பேர் உயிரிழப்பு.. விசாரணையில் மனித உரிமை ஆணையம்!

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு அருகில் உள்ள கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு போதிய வசதி இல்லாதது, போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீர்கொழும்பு மத்திய சிறை ஏற்கனவே சந்தித்து வந்தது. இந்நிலையில் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மத்திய சிறைக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதற்கு ஆதரவாக உள்ள குழுவுக்கும், எதிராக உள்ள குழுவிற்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சிறியதாக ஏற்பட்ட மோதல் கைதிகளுக்கு இடையே வன்முறையாக மாறியது. சிறை காவல்துறையினர் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்தாலும், அவர்களின் துப்பாக்கிகளைப் பறித்து துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இந்தியர் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக நீர்கொழும்பு மத்திய சிறையில் அவ்வப்போது கலவரம் ஏற்படக்கூடும் என்றால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த வன்முறை நாட்டின் மிக மோசமான சிறை மோதல்களில் ஒன்றாக உள்ளது.

நீர்கொழும்பு மத்திய சிறையில் ஏற்பட்ட வன்முறைக்குப் பின்னதாக சிறைக் கைதிகளில் பலர் வேறு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறை முழுவதும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சிஐடி, சிசிடி, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழு ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையேயான மோதல் தான் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சுமார் 650 பேருக்கான இடத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கைதிகள் இருந்தமையும் இந்த கலவரத்தில் 28 பேர் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதே வேளையில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சித்தரவதைக்கும் மோசமான நடத்தைகளுக்கும் ஆளாக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V