அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

வயநாடு நிலச்சரிவு; வானிலை பேரிடரா அல்லது மனிதர்களின் அலட்சியமா? விசாரணை தீவிரம்!

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு வயநாடு ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை இன்னும் யாராலும் மறக்க முடியவில்லை. அந்தளவிற்கு பல உயிர்களைக் காவு கொண்டது. இந்நிலையில் தற்போது வயநாடு மாவட்டத்தின் கல்லடி பகுதியில், சுரங்கச் சாலை கட்டுமானத் திட்டம் நடைபெற்று வந்த இடத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணமால் போயுள்ளனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நிலச்சரிவால் மக்களைத் தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள அலறி அடித்து ஓடி காட்சிகள் அனைத்தும் காண்போரைக் கண் கலங்க செய்தது. இந்த நிலச்சரிவிற்குள் சிக்கியவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏற்படும் நிலச்சரிவால் மீட்புப் பணிகளை வேகமாக செய்யமுடியாமல் மீட்புக்குழுவினர் திணறி வருகின்றனர்.

நிலச்சரிவிற்கானக் காரணம் என்ன?

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மற்றும் வயநாடு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அனக்கம் பொயில் கல்லாடி மெப்பாடி சுரங்கப்பாதை சாலைத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு தொழிலாளர்களையும் வாகனங்களையும் புதைத்தது மட்டுமல்லாமல், அகழ்வாராய்ச்சிப் பகுதியைப் பாதுகாக்கக் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரையும் அழித்தது. காயமடைந்த ஒன்பது பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அதே வேளையில், பல டன் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ (red alert) விடுக்கப்பட்டிருந்த நிலையிலும், இடைவிடாத மழைக்கும் இடையிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. மேலும் இந்த விபத்து இயற்கைப் பேரிடரா? அல்லது மனித அலட்சியத்தால் ஏற்பட்டதா? என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது. மேலும் கட்டுமானத் தளத்தில் மண் மற்றும் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்பட்டதே காரணமாக இருக்கலாம் என சில நிபுணர்களும், கேரள அரசின் அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கேரள அரசு சுரங்கத் திட்டப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி, சம்பவம் குறித்து இரண்டு தனித்தனி விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V