தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தில் பிறந்து மத்திய அரசின் உயரிய விருதான யுவ புராஸ்கர் விருதைப் பெற்றுள்ளார் வாகை சந்திரசேகர். கடந்த 1956 ஆம் ஆண்டு பிறந்த சந்திரசேகருக்கு இளம் வயதில் இருந்தே மேடை நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதில் அதிக ஈடுபாடுடன் இருந்துள்ளார். தொடர்ந்து சுற்றுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் தன்னுடைய கலைத்திறனை வெளிப்படுத்திய சந்திரசேகருக்கு 1980 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் சில முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. புதிய வார்டுகள், சுவரில்லாத சித்திரங்கள், ஒரு தலை ராகம் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் குணச்சித்திர நடிகர், வில்லன் கதாபாத்திரம், சில படங்களில் ஹீரோவாகவும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் வாகை சந்திரசேகர்.
இவரது நடிப்புத்திறனைப் பாராட்டி கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடாமி யுவ புராஸ்கர் தேசிய விருதை நடிகர் வாகை சந்திரசேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக யுவ புரஸ்கர் விருதான இயல், இசை, நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாக உள்ளது யுவ புரஸ்கர். வாகை சந்திரசேகரும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதோடு இயல், இசை, நாடகம் என அனைத்திலும் இவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி யுவ புரஸ்கர் என்ற உயரிய விருதான அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கீத அகாடமியின் புரஸ்கர் விருதை விரைவில் ஜனாதிபதி அவர்களால் விரைவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்….
என்னுடைய வாழ்க்கையில் பல கிராமங்கள் தோறும் புராண நாடகம், சமூக விழிப்புணர்வு நாடகம் போன்றவற்றில் நடித்திருக்கிறேன். கலைஞரின் தூக்குமேடை நாடகத்தில் நீண்ட வசனத்தைப் பேசி நடித்துள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக பெருமிதம் கொள்கிறேன் என்கிறார் வாகை சந்திரசேகர். இலக்கிய தமிழில் பேசுவதற்கு எனக்கு என்னுடைய நாடகங்கள் தான் கற்றுக்கொடுத்தது,. என்னுடைய 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கை மற்றும் நாடக கலைஞர் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த நல்ல அங்கீகாரமாக இதைப் பார்க்கிறேன் என்றும், எனக்கு தற்போது கிடைத்துள்ளது தேசிய விருதை மக்களுக்காக சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.