அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்; ஆளுநரின் நிலைப்பாடு என்ன?

தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் நேரில் சென்று தவெக தலைவர் விஜய் உரிமை கோரியிருந்தார். இருப்பினும் இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்காத அழைப்பு விடுக்காததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 108 தொகுதிகளில் தனித்து தவெக வெற்றி பெற்றிருந்தாலும், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் தேவை என்பதால் தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவைத் தவிர்த்து பிற கட்சிகளிடம் தங்களுக்கு ஆதரவு தருமாறு தவெக கோரியிருந்தது. இந்நிலையில் தான் நேற்றைக்கு காங்கிரஸ் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தது. இருந்தப்போதும் இன்னும் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவெக திணறிவருகிறது.

ஆளுநர் நெருக்கடி:

தமிழகத்தில் 108 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றிருந்த நிலையில், தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும் என ஆளுநரிடம் முறையிட்டிருந்தார். அமைச்சரவை பதவியேற்ற பிறகு, பேரவையில் கட்டாயம் நிரூபிப்போம் என ஆளுநரிடம் தெரிவித்த போதும், உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்ற தவெக தலைவருக்கு ஆளுநர் நெருக்கடி கொடுத்துள்ளார்.

இந்த சூழலில் தான் இன்றைக்கு விஜய் மீண்டும் ஆளுநரை நேரில் சந்திக்கவுள்ளார். அந்த சந்திப்பின் போது, முதலில் தமிழகத்தில் ஆட்சி அமைத்த பிறகு, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கிறோம் என கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V