அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

யாழ்ப்பாணம் திருவிழாவில் அதிக ஒளியினால் 237 பேருக்கு கண்பாதிப்பு – சிகிச்சைகள் தீவிரம்

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரான்பற்று முருக மூர்த்தி ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் பொருத்தப்பட்டிருந்த லேசர் மின்குமிழ்களின் ஒளி காரணமாக கண் பாதிப்புக்குள்ளான 237 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற ஆலய திருவிழாவில் பங்குப்பற்றியவர்களே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 157 பேர் முதல் கட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தொகை 237ஆக அதிகரித்துள்ளது.

இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருந்ததுடன், அவர்களின் பெரும்பாலானோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சிறு பாதிப்புக்கள் காண்ப்பட்டாலும், உடனடியாக மருத்துவமனைக்கு வருகைத் தந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவமனையின் பணிப்பாளர், பொதுமக்களின் கேட்டுக்கொண்டுள்ளார்.

கண் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக மருத்துவமனையில் விசேட விடுதியொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக மேலதிக மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கண் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், தாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு வருகைத் தருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, திருவிழாவின் போது வானவேடிக்கைகள், பட்டாசுக்கள் வெடித்ததை அடுத்து, சில தீ பரவல் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனாலும், சிலருக்கு கண் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

யாழ்ப்பாணம் மருத்துவமனையில் போதுமான மருந்து வகைகள் உள்ளிட்ட போதுமான வசதிகள் உள்ளதாகவும் மருத்துவமனையின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அதிகாரிகள், போலீஸார், பிரதேச செயலகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh