தமிழகத்தில் உள்ள பிராான கோயில்களில் அதன் புனிதத் தன்மை மற்றும் ஆன்மீக சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில், நீதிமன்ற உத்தரவின் படி கோயில்களுக்கு செல்போன்கள் எடுத்துச் செல்ல தடை உத்தரவு உள்ளது. இருந்த போதும் தற்போது மக்களிடம் அதிகரித்து வரும் ரீல்ஸ் மோகத்தின் காரணமாக சில கோயில்களில் புகைப்படம், வீடியோ போன்றவற்றை பக்தர்கள் பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார்
அதன்படி, 52 முதுநிலை கோயில்களில் இன்று முதல் கேமரா வசதியுடைய செல்போன்களுக்கு மட்டுமே கட்டுப்பபாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதோடு கோயிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பயன்பாடு தடை உள்ள கோயில்கள்:
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், திருத்தணி சுப்பிரமணிய சுவலாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் சுந்தரரேஸ்வரர் கோவில், ராமநாதசுவாமி கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கன்னியாகுமரி சுசீந்திரம், தாணுமாலயன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவில், வடபழனி ஆண்டவர் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் சுவாமி, தென்காசி திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில், வடலூர் சத்யஞான சபை உள்ளிட்ட சில முக்கிய கோவில்களில் செல்போன்கள் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை..
திருக்கோயில்களில் சாமி சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து செல்போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளது. மேலும் புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை என தெரிவித்ததோடு, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூட செல்போன்களை முடிந்தவரை வாகனங்களில் அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.