தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2025 ல் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி விஜய் தலைமையில் கரூரில் தவெக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதுவரை சினிமாவில் பார்த்த ஒருவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என திரளான மக்கள் கலந்து கொண்டனர். அதீத கூட்ட நெரிசல் காரணமாக தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரச்சார கூட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றதால் விஜய்க்கு ஒரு கரும்புள்ளியாகவும் இத்தேர்தல் அமைந்திடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனாலும் மக்களின் பெரும் ஆதரவோடு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னதாக கரூருக்கு முதல்வர் விஜய் சென்றுள்ளார். இந்த பயணம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
முதல்வர் விஜய்யின் வருகைக்காக கரூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்து கொண்ட விஜய் பேசுகையில், ஒரு மனிதன் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் சில காயங்களை வலிகளை மறக்க முடியாது. எல்லாவற்றையும் விட எனக்கு மிகப்பெரிய வலி என்றால் அது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தான் என கூறியுள்ளார். இதோடு மக்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகளை கேட்க வேண்டும் என்பதற்காக தான் தேர்தல் பிரசாரங்களில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் என பயணம் செய்தோம். அதேபோல, அரியலூர் கூட்டம் முடித்து பெரம்பலூர் செல்ல ஆயுத்தம் ஆன போது, பெரம்பலூரில் கூட்டம் அதிகமாக உள்ளது, செல்ல வேண்டாம் என காவல்துறையினர் கூறினார்கள். எனவே நாங்கள் பெரம்பலூர் கூட்டத்திற்கு செல்லவில்லை. அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம்.”
அதேபோல நாமக்கல் பிரசார கூட்டம் முடித்துவிட்டு கரூர் வரும்போது, கரூர் காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கலாம் அல்லவா? கரூரில் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக உள்ளது, நீங்கள் வரவேண்டாம் என சொல்லியிருக்கலாம் அல்லவா?” எனக் கேள்வியெழுப்பினார். பிறகு ஏன் என்னை காவல்துறையே வந்து கரூருக்குள் அழைத்துச் சென்றது. அன்று இருந்த கரூர் காவல்துறையின் நாடகத்தை நான் நம்பிவிட்டேன்.” என்றும் அவர் கூறினார். இதனால் நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள் என்றும் அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். என் அக்கா, தங்கைகளை இழந்திருக்கிறேன். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா? என ஆவேசமாக பேசிய விஜய், இதை வைத்து நான் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? பணமா, ஜனமா எனக் கேட்டால்; எனக்கு ஜனம்தான் முக்கியம். விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியே விடுவார் போல எனக் கதறுகிறார்கள்.
தவெக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் வேலை டக் டக் என நடக்கிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளதாக பேசிய விஜய், தீயசக்தி இப்போது யார் கதவை தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள். அவர்கள் எங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்
முந்தைய ஆட்சியில் நான் கரூருக்கு போகக் கூடாது என கட்டுப்பாடு போட பார்த்தனர். இது திமுக ஆட்சி இல்லை. நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை, நமக்கு எதிரான சதியை, சூழ்ச்சியை இனி வரும், தலைமுறைக்கு தெரியப்படுத்த கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும் வரவிருக்கும் வர இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை வெளுத்து விட வேண்டும் எனவும் கரூரில் விஜய் பேசியுள்ளார்.
அரசுப்பணிக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு:
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்கவுள்ளதாக தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் நிகழ்வை தொடரலாம் என்பதோடு இந்த நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்றும் நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டவை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று தமிழக அரசு வழங்கும் நியமனங்களுக்கு வழிகாட்டுதல்கள் குறித்தும், இந்த வழக்கில் அவை முறையாக பின்பற்றப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் நிகழ்வை தமிழக அரசு தொடரலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த நியமனங்கள் தற்காலிகமானவை என்றும் நீதிமன்ற ஆய்வுக்குட்பட்டவை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற நியமனங்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்தும், இந்த வழக்கில் அவை பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விளக்கி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசுப் பணி வாய்ப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என்றும், நியாயமான காரணம் இல்லாமல் அதை மறுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கில் டிஎன்பி எஸ்சியையும் நீதிமன்றமே தாமாக முன்வந்து இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.